Skip to content

ஸூரா ஸூரத்துத் தகாஸுர் - Word by Word

At-Takathur

(at-Takāthur)

bismillaahirrahmaanirrahiim

اَلْهٰىكُمُ التَّكَاثُرُۙ ١

alhākumu
أَلْهَىٰكُمُ
உங்களை ஈடுபடுத்தியது
l-takāthuru
ٱلتَّكَاثُرُ
அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல்
நீங்கள் கப்ருகளைச் சந்திக்கும் வரையில் (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கிவிட்டது (திருப்பிவிட்டது). ([௧௦௨] ஸூரத்துத் தகாஸுர்: ௧)
Tafseer

حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَۗ ٢

ḥattā zur'tumu
حَتَّىٰ زُرْتُمُ
நீங்கள் சந்திக்கின்ற வரை
l-maqābira
ٱلْمَقَابِرَ
புதை குழிகளை
நீங்கள் கப்ருகளைச் சந்திக்கும் வரையில் (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கிவிட்டது (திருப்பிவிட்டது). ([௧௦௨] ஸூரத்துத் தகாஸுர்: ௨)
Tafseer

كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَۙ ٣

kallā
كَلَّا
அவ்வாறல்ல
sawfa taʿlamūna
سَوْفَ تَعْلَمُونَ
(விரைவில்) அறிவீர்கள்
நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவை என்ன என்பதை) பின்னர் நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள். ([௧௦௨] ஸூரத்துத் தகாஸுர்: ௩)
Tafseer

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ ٤

thumma
ثُمَّ
பிறகு
kallā
كَلَّا
அவ்வாறல்ல
sawfa taʿlamūna
سَوْفَ تَعْلَمُونَ
(விரைவில்) அறிவீர்கள்
நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவைகளின் பலன்களையும் பின்னர்) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள். ([௧௦௨] ஸூரத்துத் தகாஸுர்: ௪)
Tafseer

كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِۗ ٥

kallā
كَلَّا
அவ்வாறல்ல
law taʿlamūna
لَوْ تَعْلَمُونَ
நீங்கள் அறிந்தால்
ʿil'ma l-yaqīni
عِلْمَ ٱلْيَقِينِ
மிக உறுதியாக அறிவது
நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற நீங்கள் அறிவீர்களாயின், ([௧௦௨] ஸூரத்துத் தகாஸுர்: ௫)
Tafseer

لَتَرَوُنَّ الْجَحِيْمَۙ ٦

latarawunna
لَتَرَوُنَّ
நிச்சயமாகப் பார்ப்பீர்கள்
l-jaḥīma
ٱلْجَحِيمَ
ஜஹீம் நரகத்தை
நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண் முன்) காண்பீர்கள். ([௧௦௨] ஸூரத்துத் தகாஸுர்: ௬)
Tafseer

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِۙ ٧

thumma
ثُمَّ
பிறகு
latarawunnahā
لَتَرَوُنَّهَا
அதை நிச்சயமாகப் பார்ப்பீர்கள்
ʿayna l-yaqīni
عَيْنَ ٱلْيَقِينِ
கண்கூடாக
சந்தேகமற, மெய்யாகவே அதனை நீங்கள் உங்கள் கண்ணால் கண்டுகொள்வீர்கள். ([௧௦௨] ஸூரத்துத் தகாஸுர்: ௭)
Tafseer

ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَىِٕذٍ عَنِ النَّعِيْمِ ࣖ ٨

thumma
ثُمَّ
பிறகு
latus'alunna
لَتُسْـَٔلُنَّ
நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
ʿani l-naʿīmi
عَنِ ٱلنَّعِيمِ
அருட்கொடையைப் பற்றி
(உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். ([௧௦௨] ஸூரத்துத் தகாஸுர்: ௮)
Tafseer