Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௯௪

Qur'an Surah Yunus Verse 94

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௯௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنْ كُنْتَ فِيْ شَكٍّ مِّمَّآ اَنْزَلْنَآ اِلَيْكَ فَسْـَٔلِ الَّذِيْنَ يَقْرَءُوْنَ الْكِتٰبَ مِنْ قَبْلِكَ ۚ لَقَدْ جَاۤءَكَ الْحَقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُمْتَرِيْنَۙ (يونس : ١٠)

fa-in kunta
فَإِن كُنتَ
So if you are
நீர் இருந்தால்
fī shakkin
فِى شَكٍّ
in doubt
சந்தேகத்தில்
mimmā anzalnā
مِّمَّآ أَنزَلْنَآ
of what We have revealed
நாம் இறக்கியதில்
ilayka
إِلَيْكَ
to you
உமக்கு
fasali
فَسْـَٔلِ
then ask
கேட்பீராக
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
yaqraūna
يَقْرَءُونَ
(have been) reading
படிக்கின்றார்கள்
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
வேதத்தை
min qablika
مِن قَبْلِكَۚ
before you before you
உமக்கு முன்னர்
laqad
لَقَدْ
Verily
வந்துவிட்டது
jāaka
جَآءَكَ
has come to you
வந்துவிட்டது உமக்கு
l-ḥaqu
ٱلْحَقُّ
the truth
உண்மை
min rabbika
مِن رَّبِّكَ
from your Lord
உமது இறைவனிடமிருந்து
falā takūnanna
فَلَا تَكُونَنَّ
so (do) not be
ஆகவே நீர் அறவே ஆகிவிடாதீர்
mina l-mum'tarīna
مِنَ ٱلْمُمْتَرِينَ
among the doubters
சந்தேகப்படுபவர்களில்

Transliteration:

Fa in kunta fee shakkim mimmaaa anzalnaaa ilaika fas'alil lazeena yaqra'oonal Kitaaba min qablik; laqad jaaa'akal haqqu mir Rabbika falaa takoonanna minal mumtareen (QS. al-Yūnus:94)

English Sahih International:

So if you are in doubt, [O Muhammad], about that which We have revealed to you, then ask those who have been reading the Scripture before you. The truth has certainly come to you from your Lord, so never be among the doubters. (QS. Yunus, Ayah ௯௪)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நாம் உங்களுக்கு அருட்செய்திருக்கும் இதில் (சிறிதும் சந்தேகம் கொள்ளாதீர்கள்.) நீங்கள் சந்தேகித்தால் உங்களுக்கு முன்னர் அருளப்பட்ட வேதங்களை ஓதுபவர்களிடம் நீங்கள் கேட்டுப் பாருங்கள். நிச்சயமாக உங்கள் இறைவனிட மிருந்தே உண்மை(யான இவ்வேதம்) உங்களிடம் வந்தது. ஆதலால், சந்தேகப்படுபவர்களில் நீங்களும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௯௪)

Jan Trust Foundation

(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக; நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) நாம் உமக்கு இறக்கியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முன்னர் (கொடுக்கப்பட்ட) வேதத்தை படிக்கின்றவர்களிடம் கேட்பீராக! உம் இறைவனிடமிருந்து உண்மை உமக்கு வந்துவிட்டது. ஆகவே, சந்தேகப்படுபவர்களில் நீர் அறவே ஆகிவிடாதீர்!