குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௯௨
Qur'an Surah Yunus Verse 92
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௯௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَالْيَوْمَ نُنَجِّيْكَ بِبَدَنِكَ لِتَكُوْنَ لِمَنْ خَلْفَكَ اٰيَةً ۗوَاِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ عَنْ اٰيٰتِنَا لَغٰفِلُوْنَ (يونس : ١٠)
- fal-yawma nunajjīka
- فَٱلْيَوْمَ نُنَجِّيكَ
- So today We will save you
- இன்று/ நாம் உயரத்தில் வைப்போம் / உன்னை
- bibadanika
- بِبَدَنِكَ
- in your body
- உன் உடலை
- litakūna
- لِتَكُونَ
- that you may be
- நீ ஆகுவதற்காக
- liman
- لِمَنْ
- for (those) who
- எவருக்கு
- khalfaka
- خَلْفَكَ
- succeed you
- பின்னால்/உனக்கு
- āyatan
- ءَايَةًۚ
- a sign
- ஓர் அத்தாட்சியாக
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- kathīran
- كَثِيرًا
- many
- அதிகமானவர்
- mina l-nāsi ʿan
- مِّنَ ٱلنَّاسِ عَنْ
- among the mankind of
- மக்களில்/விட்டு
- āyātinā
- ءَايَٰتِنَا
- Our Signs
- நம் அத்தாட்சிகளை
- laghāfilūna
- لَغَٰفِلُونَ
- (are) surely heedless"
- அலட்சியம் செய்பவர்கள்தான்
Transliteration:
Falyawma nunajjeeka bibadanika litakoona liman khalfaka Aayah; wa inna kaseeram minan naasi 'an aayaatinaa laghaafiloon(QS. al-Yūnus:92)
English Sahih International:
So today We will save you in body that you may be to those who succeed you a sign. And indeed, many among the people, of Our signs, are heedless. (QS. Yunus, Ayah ௯௨)
Abdul Hameed Baqavi:
எனினும், உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஒரு அத்தாட்சியாவதற்காக உன்னுடைய உடலை (அது அழியாமல்) நாம் இன்றைய தினம் பாதுகாத்துக் கொள்வோம்" (என்று கூறினோம்.) எனினும், நிச்சயமாக மனிதர்களில் பலர் நம்முடைய (அத்தகைய) அத்தாட்சிகளைப் பற்றியும் பராமுகமாயிருக்கின்றனர். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௯௨)
Jan Trust Foundation
எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு நீ ஓர் அத்தாட்சியாக ஆகுவதற்காக உன் உடலை நாம் உயர(மான இட)த்தில் வைப்போம்.” நிச்சயமாக மக்களில் அதிகமானவர் நம் அத்தாட்சிகளை அலட்சியம் செய்பவர்கள்தான்.