குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௮௩
Qur'an Surah Yunus Verse 83
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௮௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَمَآ اٰمَنَ لِمُوْسٰىٓ اِلَّا ذُرِّيَّةٌ مِّنْ قَوْمِهٖ عَلٰى خَوْفٍ مِّنْ فِرْعَوْنَ وَمَلَا۟ىِٕهِمْ اَنْ يَّفْتِنَهُمْ ۗوَاِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِى الْاَرْضِۚ وَاِنَّهٗ لَمِنَ الْمُسْرِفِيْنَ (يونس : ١٠)
- famā āmana
- فَمَآ ءَامَنَ
- But none believed
- நம்பிக்கை கொள்ளவில்லை
- limūsā
- لِمُوسَىٰٓ
- Musa
- மூஸாவை
- illā
- إِلَّا
- except
- தவிர
- dhurriyyatun
- ذُرِّيَّةٌ
- (the) offspring
- ஒரு சந்ததியினர்
- min qawmihi
- مِّن قَوْمِهِۦ
- among his people
- அவரின்சமுதாயத்தில்
- ʿalā khawfin
- عَلَىٰ خَوْفٍ
- for fear
- பயந்து
- min fir'ʿawna
- مِّن فِرْعَوْنَ
- of Firaun
- ஃபிர்அவ்ன்
- wamala-ihim
- وَمَلَإِي۟هِمْ
- and their chiefs
- இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள்
- an yaftinahum
- أَن يَفْتِنَهُمْۚ
- lest they persecute them
- அவன் துன்புறுத்துவதை/தங்களை
- wa-inna
- وَإِنَّ
- And indeed
- நிச்சயமாக
- fir'ʿawna
- فِرْعَوْنَ
- Firaun
- ஃபிர்அவ்ன்
- laʿālin
- لَعَالٍ
- (was) a tyrant
- சர்வாதிகாரி
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- in the earth
- பூமியில்
- wa-innahu
- وَإِنَّهُۥ
- and indeed he
- இன்னும் நிச்சயமாக அவன்
- lamina l-mus'rifīna
- لَمِنَ ٱلْمُسْرِفِينَ
- (was) of the ones who commit excesses
- வரம்பு மீறக்கூடியவர்களில்
Transliteration:
Famaaa aamana li-Moosaaa illaa zurriyyatum min qawmihee 'alaa khawfim min Fir'awna wa mala'ihim ai yaftinahum; wa inna Fir'awna la'aalin fil ardi wa innahoo laminal musrifeen(QS. al-Yūnus:83)
English Sahih International:
But no one believed Moses, except [some] offspring [i.e., youths] among his people, for fear of Pharaoh and his establishment that they would persecute them. And indeed, Pharaoh was haughty within the land, and indeed, he was of the transgressors. (QS. Yunus, Ayah ௮௩)
Abdul Hameed Baqavi:
(இதனைக் கண்ணுற்ற பின்னரும்) மூஸாவை அவர் இனத்தவரில் சிலர்தாம் நம்பிக்கை கொண்டனர். அவர்களும் தங்களை ஃபிர்அவ்னும், அவனுடைய இனத்தவர்களும் துன்புறுத்து வார்களோ என்று பயந்துகொண்டே இருந்தனர். ஏனென்றால், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அத்தேசத்தில் மிகச் சக்தி வாய்ந்தவனாக இருந்ததால் வரம்பு மீறிக் (கொடுமை செய்து) கொண்டிருந்தான். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௮௩)
Jan Trust Foundation
ஃபிர்அவ்னும், அவனுடைய பிரமுகர்களும் தங்களைத் துன்புறுத்துவார்களே என்ற பயத்தின் காரணமாக, மூஸாவின் மீது அவருடைய சமூகத்தாரின் சந்ததியினர் சிலரைத் தவிர (வேறு) ஈமான் கொள்ளவில்லை, ஏனெனில், நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த பூமியில் வலிமை மிக்கவனாக இருந்தான்; வரம்பு மீறிக் (கொடுமை செய்பவனாகவும்) இருந்தான்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தங்களை ஃபிர்அவ்னும், அவனுடைய முக்கிய பிரமுகர்களும் துன்புறுத்துவதை பயந்து மூஸாவை அவரின் சமுதாயத்தில் ஒரு (சில) சந்ததியினரைத் தவிர (மற்றவர்கள்) நம்பிக்கை கொள்ளவில்லை. நிச்சயமாக ஃபிர்அவ்ன் பூமியில் ஒரு சர்வாதிகாரி (அடக்கி ஆளும் வம்பன்) ஆவான். இன்னும் நிச்சயமாக அவன் வரம்பு மீறக்கூடியவர்களில் இருந்தான்.