Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௭௪

Qur'an Surah Yunus Verse 74

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௭௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ثُمَّ بَعَثْنَا مِنْۢ بَعْدِهٖ رُسُلًا اِلٰى قَوْمِهِمْ فَجَاۤءُوْهُمْ بِالْبَيِّنٰتِ فَمَا كَانُوْا لِيُؤْمِنُوْا بِمَا كَذَّبُوْا بِهٖ مِنْ قَبْلُ ۗ كَذٰلِكَ نَطْبَعُ عَلٰى قُلُوْبِ الْمُعْتَدِيْنَ (يونس : ١٠)

thumma
ثُمَّ
Then
பிறகு
baʿathnā
بَعَثْنَا
We sent
அனுப்பினோம்
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
after him after him
அவருக்குப் பின்னர்
rusulan
رُسُلًا
Messengers
தூதர்களை
ilā qawmihim
إِلَىٰ قَوْمِهِمْ
to their people
சமுதாயத்திற்கு/அவர்களுடைய
fajāūhum
فَجَآءُوهُم
and they came to them
அவர்கள் வந்தார்கள் அவர்களிடம்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
with clear proofs
அத்தாட்சிகளைக் கொண்டு
famā kānū
فَمَا كَانُوا۟
But not they were
அவர்கள் இருக்கவில்லை
liyu'minū
لِيُؤْمِنُوا۟
to believe
அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக
bimā kadhabū
بِمَا كَذَّبُوا۟
what they had denied
அவர்கள் பொய்ப்பித்தவற்றை
bihi
بِهِۦ
[it]
அதை
min qablu
مِن قَبْلُۚ
before before
முன்னர்
kadhālika
كَذَٰلِكَ
Thus
இவ்வாறே
naṭbaʿu
نَطْبَعُ
We seal
முத்திரையிடுகிறோம்
ʿalā
عَلَىٰ
[on]
மீது
qulūbi
قُلُوبِ
the hearts
உள்ளங்கள்
l-muʿ'tadīna
ٱلْمُعْتَدِينَ
(of) the transgressors
வரம்புமீறிகளின்

Transliteration:

Summma ba'asnaa mim ba'dihee Rusulan ilaa qawmihim fajaaa'oohum bilbaiyinaati famaa kaanoo liyu'minoo bimaa kazzaboo bihee min qabl; kazaalika natba'u 'alaa quloobil mu'tadeen (QS. al-Yūnus:74)

English Sahih International:

Then We sent after him messengers to their peoples, and they came to them with clear proofs. But they were not to believe in that which they had denied before. Thus We seal over the hearts of the transgressors. (QS. Yunus, Ayah ௭௪)

Abdul Hameed Baqavi:

அவருக்குப் பின்னர் தோன்றிய மக்களுக்கும், (நாம்) தூதர்கள் பலரை அனுப்பி வைத்தோம். அத்தூதர்களும் தெளிவான பல அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வந்தார்கள். ஆயினும், இவர்களுக்கு முன்னர் (இவர்களுடைய மூதாதைகள்) பொய்யாக்கிக் கொண்டிருந்தவை(களான உண்மை)களை இவர்களும் நம்பிக்கைக் கொள்பவர்களாக இருக்கவில்லை. வரம்பு மீறும் இத்தகையவர் களுடைய உள்ளங்கள் மீது (அவர்களின் பாவத்தின் காரணமாக) இவ்வாறே நாம் முத்திரையிட்டு விடுகிறோம். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௭௪)

Jan Trust Foundation

அவருக்கு பின், அவ(ரவ)ர் சமூகத்தினருக்குத் தூதுவர்களை அனுப்பிவைத்தோம்; அவர்களும் தெளிவான அத்தாட்சிகளை அ(ச்சமூகத்த)வர்களிடம் கொண்டு வந்தார்கள்; எனினும், முன்னர் இருந்தவர்கள் எந்த (உண்மையைப்) பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, (அந்த உண்மையை) இவர்களும் நம்பவில்லை - வரம்பு மீறும் இத்தகையவர்களின் நெஞ்சங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவருக்குப் பின்னர் (பல) தூதர்களை அவர்களுடைய சமுதாயத்திற்கு அனுப்பினோம். அவர்கள் அவர்களிடம் (பல) அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். முன்னர் அவர்கள் பொய்ப்பித்தவற்றை நம்பிக்கை கொள்வதற்கு அவர்கள் இருக்கவில்லை. வரம்பு மீறிகளின் உள்ளங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்.