Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௭௨

Qur'an Surah Yunus Verse 72

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௭௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَاِنْ تَوَلَّيْتُمْ فَمَا سَاَلْتُكُمْ مِّنْ اَجْرٍۗ اِنْ اَجْرِيَ اِلَّا عَلَى اللّٰهِ ۙوَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُسْلِمِيْنَ (يونس : ١٠)

fa-in tawallaytum
فَإِن تَوَلَّيْتُمْ
But if you turn away
நீங்கள் திரும்பினால்
famā sa-altukum
فَمَا سَأَلْتُكُم
then not I have asked you
நான் கேட்கவில்லை/உங்களிடம்
min ajrin
مِّنْ أَجْرٍۖ
any reward
எந்த கூலியையும்
in ajriya
إِنْ أَجْرِىَ
Not (is) my reward
என் கூலி இல்லை
illā
إِلَّا
but
தவிர
ʿalā
عَلَى
on
மீதே
l-lahi
ٱللَّهِۖ
Allah
அல்லாஹ்வின்
wa-umir'tu
وَأُمِرْتُ
and I have been commanded
இன்னும் கட்டளையிடப் பட்டேன்
an akūna
أَنْ أَكُونَ
that I be
நான் ஆகவேண்டுமென
mina l-mus'limīna
مِنَ ٱلْمُسْلِمِينَ
of the Muslims"
முஸ்லிம்களில்

Transliteration:

Fa in tawallaitum famaa sa altukum min ajrin in ajriya illaa 'alal laahi wa umirtu an akoona minal muslimeen (QS. al-Yūnus:72)

English Sahih International:

And if you turn away [from my advice] – then no payment have I asked of you. My reward is only from Allah, and I have been commanded to be of the Muslims [i.e., those who submit to Allah]." (QS. Yunus, Ayah ௭௨)

Abdul Hameed Baqavi:

(அன்றி,) பின்னும் நீங்கள் (என்னைப்) புறக்கணித்(து நிராகரித்)தால் (அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்,) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் எதிர்பார்க்கவில்லை; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (மற்றெவரிடமும்) இல்லை. நான் அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டு நடக்கும்படியாகவே கட்டளையிடப்பட்டுள்ளேன்" (என்று கூறினார்.) (ஸூரத்து யூனுஸ், வசனம் ௭௨)

Jan Trust Foundation

“ஆனால், நீங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்று கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் (புறக்கணித்து) திரும்பினால், (எனக்கு கவலையில்லை. ஏனெனில்,) நான் உங்களிடம் எந்த கூலியையும் கேட்கவில்லை; என் கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (மற்றவர் மீது) இல்லை. முஸ்லிம்களில் நான் ஆகவேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளேன்”(என்று கூறினார்).