குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௭௧
Qur'an Surah Yunus Verse 71
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௭௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ نُوْحٍۘ اِذْ قَالَ لِقَوْمِهٖ يٰقَوْمِ اِنْ كَانَ كَبُرَ عَلَيْكُمْ مَّقَامِيْ وَتَذْكِيْرِيْ بِاٰيٰتِ اللّٰهِ فَعَلَى اللّٰهِ تَوَكَّلْتُ فَاَجْمِعُوْٓا اَمْرَكُمْ وَشُرَكَاۤءَكُمْ ثُمَّ لَا يَكُنْ اَمْرُكُمْ عَلَيْكُمْ غُمَّةً ثُمَّ اقْضُوْٓا اِلَيَّ وَلَا تُنْظِرُوْنِ (يونس : ١٠)
- wa-ut'lu
- وَٱتْلُ
- And recite
- ஓதுவீராக
- ʿalayhim
- عَلَيْهِمْ
- to them
- அவர்களுக்கு
- naba-a
- نَبَأَ
- the news
- சரித்திரத்தை
- nūḥin
- نُوحٍ
- (of) Nuh
- நூஹூடைய
- idh qāla
- إِذْ قَالَ
- when he said
- சமயத்தை/அவர்கள் கூறினார்
- liqawmihi
- لِقَوْمِهِۦ
- to his people
- தன் சமுதாயத்தை நோக்கி
- yāqawmi
- يَٰقَوْمِ
- "O my people!
- என் சமுதாயமே
- in kāna
- إِن كَانَ
- If is
- இருந்தால்
- kabura
- كَبُرَ
- hard
- பாரமாக
- ʿalaykum
- عَلَيْكُم
- on you
- உங்கள் மீது
- maqāmī
- مَّقَامِى
- my stay
- நான் தங்குவது
- watadhkīrī
- وَتَذْكِيرِى
- and my reminding
- இன்னும் நான்உபதேசிப்பது
- biāyāti
- بِـَٔايَٰتِ
- the Signs of Allah
- வசனங்களைக் கொண்டு
- l-lahi
- ٱللَّهِ
- the Signs of Allah
- அல்லாஹ்வின்
- faʿalā l-lahi
- فَعَلَى ٱللَّهِ
- then on Allah
- மீது/அல்லாஹ்
- tawakkaltu
- تَوَكَّلْتُ
- I put my trust
- நான் நம்பிக்கை வைத்தேன்
- fa-ajmiʿū
- فَأَجْمِعُوٓا۟
- So you all resolve
- ஆகவேமுடிவுசெய்யுங்கள்
- amrakum
- أَمْرَكُمْ
- your plan
- காரியத்தை உங்கள்
- washurakāakum
- وَشُرَكَآءَكُمْ
- and your partners
- இன்னும் இணை தெய்வங்களை உங்கள்
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- lā yakun
- لَا يَكُنْ
- let not be let not be
- ஆகிவிடவேண்டாம்
- amrukum
- أَمْرُكُمْ
- (in) your plan
- காரியம் உங்கள்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- for you
- உங்கள் மீது
- ghummatan
- غُمَّةً
- any doubt
- குழப்பமானதாக
- thumma
- ثُمَّ
- Then
- பிறகு
- iq'ḍū
- ٱقْضُوٓا۟
- carry (it out)
- நிறைவேற்றுங்கள்
- ilayya
- إِلَىَّ
- upon me
- என் பக்கம்
- walā tunẓirūni
- وَلَا تُنظِرُونِ
- and (do) not give me respite
- நீங்கள் அவகாசமளிக்காதீர்கள்/எனக்கு
Transliteration:
Watlu 'alaihim naba-a-Noohin iz qaala liqawmihee yaa qawmi in kaana kabura 'alaikum maqaamee wa tazkeeree bi Aayaatil laahi fa'alal laahi tawakkaltu fa ajmi'ooo amrakum wa shurakaaa'akum summa laa yakun amrukum 'alaikum ghummatan summmaq dooo ilaiya wa laa tunziroon(QS. al-Yūnus:71)
English Sahih International:
And recite to them the news of Noah, when he said to his people, "O my people, if my residence and my reminding of the signs of Allah has become burdensome upon you – then I have relied upon Allah. So resolve upon your plan and [call upon] your associates. Then let not your plan be obscure to you. Then carry it out upon me and do not give me respite. (QS. Yunus, Ayah ௭௧)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நூஹ் உடைய சரித்திரத்தை நீங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பியுங்கள். அவர் தன் மக்களை நோக்கி, "என்னுடைய மக்களே! நான் (உங்களிடத்தில்) இருப்பதும், நான் (உங்களுக்கு) அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பதும் உங்களுக்குப் பளுவாகத் தோன்றி (அதற்காக நீங்கள் எனக்கு ஏதும் தீங்கு செய்யக் கருதினால், நான் அல்லாஹ்வையே நம்பியிருக்கிறேன். நீங்கள் குறைவு செய்துவிட்டதாக பின்னர் உங்களுக்குக் கவலை ஏற்படாதவாறு நீங்கள் உங்கள் சகாக்களையும் சேர்த்துக்கொண்டு நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து (எனக்குத் தீங்கிழைக்க) ஒரு காரியத்தை முடிவு செய்துகொண்டு (அம்முடிவின்படி) எனக்குச் செய்து பாருங்கள். (இதில்) நீங்கள் சிறிதும் தாமதிக்க வேண்டாம்" என்று கூறினார். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௭௧)
Jan Trust Foundation
மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாரை நோக்கி, “என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம் செய்ய வேண்டாம்” என்று கூறினார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதுவீராக! அவர் தன் சமுதாயத்தை நோக்கி, “என் சமுதாயமே! (உங்களுடன்) நான் தங்குவதும், அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு (உங்களுக்கு) நான் உபதேசிப்பதும் உங்கள் மீது பாரமாக இருந்தால், நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். ஆகவே, உங்கள் காரியத்தை முடிவுசெய்யுங்கள்; உங்கள் இணைதெய்வங்களையும் (அழைத்துக் கொள்ளுங்கள்); பிறகு, உங்கள் காரியம் உங்கள் மீது குழப்பமானதாக ஆகிவிடவேண்டாம். பிறகு, என் பக்கம் (அம்முடிவை) நிறைவேற்றுங்கள். (இதில்) நீங்கள் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்.