குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௭௦
Qur'an Surah Yunus Verse 70
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௭௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
مَتَاعٌ فِى الدُّنْيَا ثُمَّ اِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِيْقُهُمُ الْعَذَابَ الشَّدِيْدَ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ ࣖ (يونس : ١٠)
- matāʿun
- مَتَٰعٌ
- An enjoyment
- ஒரு சுகம்
- fī l-dun'yā
- فِى ٱلدُّنْيَا
- in the world
- உலகில்
- thumma
- ثُمَّ
- then
- பிறகு
- ilaynā
- إِلَيْنَا
- to Us
- நம்மிடமே
- marjiʿuhum thumma
- مَرْجِعُهُمْ ثُمَّ
- (is) their return then
- மீளுமிடம்/அவர்களுடைய/பிறகு
- nudhīquhumu
- نُذِيقُهُمُ
- We will make them taste
- சுவைக்க வைப்போம் அவர்களுக்கு
- l-ʿadhāba l-shadīda
- ٱلْعَذَابَ ٱلشَّدِيدَ
- the punishment the severe
- வேதனை/கடினமான
- bimā
- بِمَا
- because
- எதன் காரணமாக
- kānū
- كَانُوا۟
- they used to
- இருந்தனர்
- yakfurūna
- يَكْفُرُونَ
- disbelieve
- அவர்கள் நிராகரிக்கிறார்கள்
Transliteration:
Mataa'un fiddunyaa summa ilainaa marji'uhum summa nuzeequhumul 'azaabash shadeeda bimaa kaanoo yakkfuroon(QS. al-Yūnus:70)
English Sahih International:
[For them is brief] enjoyment in this world; then to Us is their return; then We will make them taste the severe punishment because they used to disbelieve. (QS. Yunus, Ayah ௭௦)
Abdul Hameed Baqavi:
(இத்தகையவர்கள்) இவ்வுலகில் சிறிது சுகமனுபவிக்கலாம். பின்னர் (மறுமையிலோ) நம்மிடம்தான் அவர்கள் வரவேண்டிய திருக்கிறது. பின்னர், (உண்மையை இவ்வாறு) அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக கடினமான வேதனையைச் சுவைக்கும்படி நாம் செய்வோம். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௭௦)
Jan Trust Foundation
உலகத்தில் (அவர்கள் அனுபவிப்பது) சிறு சுகமே யாகும்; பின்னர் அவர்கள் நம்மிடமே மீண்டும் வர வேண்டியிருக்கிறது; அப்பொழுது, அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததின் காரணமாக, நாம் அவர்களைக் கடுமையான வேதனையைச் சுவைக்கச் செய்வோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவ்வுலகில் (அவர்களுக்கு அற்ப) சுகம் (உண்டு). பிறகு, நம்மிடமே அவர்களுடைய மீளுமிடம் இருக்கிறது. பிறகு, அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக கடினமான வேதனையை அவர்களுக்கு சுவைக்க வைப்போம்.