Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௬௮

Qur'an Surah Yunus Verse 68

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௬௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا سُبْحٰنَهٗ ۗ هُوَ الْغَنِيُّ ۗ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ اِنْ عِنْدَكُمْ مِّنْ سُلْطٰنٍۢ بِهٰذَاۗ اَتَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ (يونس : ١٠)

qālū
قَالُوا۟
They say
கூறுகின்றனர்
ittakhadha
ٱتَّخَذَ
"Allah has taken
ஆக்கிக் கொண்டான்
l-lahu
ٱللَّهُ
"Allah has taken
அல்லாஹ்
waladan
وَلَدًاۗ
a son"
ஒரு சந்ததியை
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥۖ
Glory be to Him!
அவன் மிகப் பரிசுத்தமானவன்
huwa
هُوَ
He
அவன்
l-ghaniyu
ٱلْغَنِىُّۖ
(is) the Self-sufficient
தேவையற்றவன்
lahu
لَهُۥ
To Him (belongs)
அவனுக்கே
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
whatever (is) in the heavens
வானங்களில் உள்ளவை
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۚ
and whatever (is) in the earth
இன்னும் பூமியிலுள்ளவை
in ʿindakum
إِنْ عِندَكُم
Not you have
இல்லை/உங்களிடம்
min sul'ṭānin
مِّن سُلْطَٰنٍۭ
any authority
எந்த ஓர் ஆதாரம்
bihādhā
بِهَٰذَآۚ
for this
இதற்கு
ataqūlūna
أَتَقُولُونَ
Do you say
கூறுகிறீர்களா?
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
about Allah
அல்லாஹ்வின் மீது
mā lā taʿlamūna
مَا لَا تَعْلَمُونَ
what not you know?
எதை/ அறியமாட்டீர்கள்

Transliteration:

Qaalut takhazal laahu waladan Subhaanahoo Huwal Ghaniyyu lahoo maa fis samaawaati wa maa fil ard; in 'indakum min sultaanim bihaazaaa; ataqooloona 'alal laahi maa laa ta'lamoon (QS. al-Yūnus:68)

English Sahih International:

They have said, "Allah has taken a son." Exalted is He; He is the [one] Free of need. To Him belongs whatever is in the heavens and whatever is in the earth. You have no authority for this [claim]. Do you say about Allah that which you do not know? (QS. Yunus, Ayah ௬௮)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வுக்குச் சந்ததி உண்டென்று (சிலர்) கூறுகின்றனர். அவனோ (இக்கற்பனையிலிருந்து) மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததியின்) தேவையற்றவன். வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே சொந்தமானவை. (அவனுக்குச் சந்ததி உண்டென்று கூறும்) இதற்கு உங்களிடத்தில் எத்தகைய ஆதாரமும் இல்லை. நீங்கள் நிச்சயமாக அறிந்து கொள்ளாமலேயே அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்) கூறுகிறீர்களா? (ஸூரத்து யூனுஸ், வசனம் ௬௮)

Jan Trust Foundation

அல்லாஹ் ஒரு சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான் என்று அவர்கள் சொல்கிறார்கள்; (அவர்களின் இக்கற்பனையை விட்டும்) அல்லாஹ் மிகத்தூய்மையானவன்; அவன் எவ்விதத் தேவையுமில்லாதவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் யாவும் அவனுக்கே உரியன; (எனவே அவன் சந்ததி ஏற்படுத்திக் கொண்டான் என்பதற்கு) உங்களிடம் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை; நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்யாகக்) கூறுகிறீர்களா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் சந்ததியை ஆக்கிக்கொண்டான் என்று (சிலர்) கூறுகின்றனர். அவனோ மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததியை விட்டு) தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. இ(வ்வாறு கூறுவ)தற்கு உங்களிடம் எந்த ஓர் ஆதாரமும் இல்லை. நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுகிறீர்களா?