Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௬௬

Qur'an Surah Yunus Verse 66

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௬௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَآ اِنَّ لِلّٰهِ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِۗ وَمَا يَتَّبِعُ الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ شُرَكَاۤءَ ۗاِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَ (يونس : ١٠)

alā
أَلَآ
No doubt!
அறிந்துகொள்ளுங்கள்!
inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
lillahi
لِلَّهِ
to Allah (belongs)
அல்லாஹ்வுக்கு
man
مَن
whoever
எவர்கள்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
(is) in the heavens
வானங்களில்
waman
وَمَن
and whoever
இன்னும் எவர்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۗ
(is) in the earth
பூமியில்
wamā
وَمَا
And not
இன்னும் எதை?
yattabiʿu
يَتَّبِعُ
follow
பின்பற்றுகின்றனர்
alladhīna
ٱلَّذِينَ
those who
எவர்கள்
yadʿūna
يَدْعُونَ
invoke
அழைக்கிறார்கள்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
other than Allah other than Allah other than Allah
அல்லாஹ்வையன்றி
shurakāa
شُرَكَآءَۚ
partners
இணை(தெய்வங்) களை
in yattabiʿūna
إِن يَتَّبِعُونَ
Not they follow
அவர்கள் பின்பற்றுவதில்லை
illā
إِلَّا
but
தவிர
l-ẓana
ٱلظَّنَّ
the assumption
சந்தேகத்தை
wa-in hum
وَإِنْ هُمْ
and not they
இல்லை/அவர்கள்
illā
إِلَّا
but
தவிர
yakhruṣūna
يَخْرُصُونَ
guess
கற்பனை செய்பவர்களாக

Transliteration:

Alaaa inna lillaahi man fis samaawaati wa man fil ard; wa maa yattabi'ul lazeena yad'oona min doonil laahi shurakaaa'; iny yattabi'oona illaz zannna wa in hum illaa yakhrusoon (QS. al-Yūnus:66)

English Sahih International:

Unquestionably, to Allah belongs whoever is in the heavens and whoever is on the earth. And those who invoke other than Allah do not [actually] follow [His] "partners." They follow not except assumption, and they are not but misjudging. (QS. Yunus, Ayah ௬௬)

Abdul Hameed Baqavi:

வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியனவே என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (இவ்வாறிருக்க,) அல்லாஹ்வையன்றி மற்றவைகளையும் தெய்வங்கள் என அழைப்பவர்கள் எதைத்தான் பின்பற்றுகின்றனர்? வீண் சந்தேகத்தையன்றி அவர்கள் பின்பற்றுவதில்லை; அன்றி அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே! (ஸூரத்து யூனுஸ், வசனம் ௬௬)

Jan Trust Foundation

அறிந்து கொள்ளுங்கள் வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் (அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அல்லாத வேறு (அவர்கள் இணை வைக்கும் தெய்வங்களில்) எதனைப் பின்பற்றுகிறார்கள்? அவர்கள் பின்பற்றுவது வெறும் யூகமேயன்றி வேறொன்றும் இல்லை - இன்னும், அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அறிந்து கொள்ளுங்கள்! வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியவர்களே. அல்லாஹ்வை அன்றி இணை (தெய்வங்)களை அழைப்பவர்கள் எதைப் பின்பற்றுகின்றனர்? சந்தேகத்தைத் தவிர அவர்கள் (வேறு எதையும்) பின்பற்றுவதில்லை; அவர்கள் கற்பனை செய்பவர்களாகவே தவிர (ஆதாரங்களை ஏற்பவர்களாக) இல்லை!