Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௬௪

Qur'an Surah Yunus Verse 64

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَهُمُ الْبُشْرٰى فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِۗ لَا تَبْدِيْلَ لِكَلِمٰتِ اللّٰهِ ۗذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُۗ (يونس : ١٠)

lahumu
لَهُمُ
For them
அவர்களுக்கே
l-bush'rā
ٱلْبُشْرَىٰ
(are) the glad tidings
நற்செய்தி
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
in the life
வாழ்வில்
l-dun'yā
ٱلدُّنْيَا
(of) the world
உலகம்
wafī l-ākhirati
وَفِى ٱلْءَاخِرَةِۚ
and in the Hereafter
மறுமையில்
lā tabdīla
لَا تَبْدِيلَ
No change
அறவே இல்லை/மாற்றம்
likalimāti
لِكَلِمَٰتِ
(is there) in the Words
வாக்குகளில்
l-lahi
ٱللَّهِۚ
(of) Allah
அல்லாஹ்வுடைய
dhālika huwa
ذَٰلِكَ هُوَ
That is
இதுதான்
l-fawzu
ٱلْفَوْزُ
the success
வெற்றி
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
the great
மகத்தானது

Transliteration:

Lahumul bushraa filha yaatid dunyaa wa fil Aakhirah; laa tabdeela likalimaatil laah; zaalika huwal fawzul 'azeem (QS. al-Yūnus:64)

English Sahih International:

For them are good tidings in the worldly life and in the Hereafter. No change is there in the words [i.e., decrees] of Allah. That is what is the great attainment. (QS. Yunus, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. (மேலான பதவிகளை அவர்களுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதுதான் மகத்தான வெற்றியாகும். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௬௪)

Jan Trust Foundation

அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நன்மாராயமுண்டு; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உலக வாழ்விலும், மறுமையிலும் அவர்களுக்கே நற்செய்தி உண்டு. அல்லாஹ்வுடைய வாக்குகளில் மாற்றம் அறவே இல்லை. இதுதான் மகத்தான வெற்றியாகும்.