Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௬௧

Qur'an Surah Yunus Verse 61

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا تَكُوْنُ فِيْ شَأْنٍ وَّمَا تَتْلُوْا مِنْهُ مِنْ قُرْاٰنٍ وَّلَا تَعْمَلُوْنَ مِنْ عَمَلٍ اِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُوْدًا اِذْ تُفِيْضُوْنَ فِيْهِۗ وَمَا يَعْزُبُ عَنْ رَّبِّكَ مِنْ مِّثْقَالِ ذَرَّةٍ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَاۤءِ وَلَآ اَصْغَرَ مِنْ ذٰلِكَ وَلَآ اَكْبَرَ اِلَّا فِيْ كِتٰبٍ مُّبِيْنٍ (يونس : ١٠)

wamā takūnu
وَمَا تَكُونُ
And not you are
இருக்கமாட்டீர்
fī shanin
فِى شَأْنٍ
[in] any situation
எந்த செயலிலும்
wamā tatlū
وَمَا تَتْلُوا۟
and not you recite
இன்னும் நீர் ஓத மாட்டீர்
min'hu
مِنْهُ
of it
அதிலிருந்து
min qur'ānin
مِن قُرْءَانٍ
from (the) Quran
குர்ஆனிலிருந்து
walā taʿmalūna
وَلَا تَعْمَلُونَ
and not you do
இன்னும் செய்யமாட்டீர்கள்
min ʿamalin
مِنْ عَمَلٍ
any deed
எந்த செயலையும்
illā
إِلَّا
except
தவிர
kunnā
كُنَّا
We are
நாம் இருந்தோம்
ʿalaykum
عَلَيْكُمْ
over you
உங்கள் மீது
shuhūdan
شُهُودًا
witnesses
சாட்சிகளாக
idh
إِذْ
when
போது
tufīḍūna
تُفِيضُونَ
you are engaged
ஈடுபடுகிறீர்கள்
fīhi
فِيهِۚ
in it
அவற்றில்
wamā yaʿzubu
وَمَا يَعْزُبُ
And not escapes
இன்னும் மறையாது
ʿan rabbika
عَن رَّبِّكَ
from your Lord
உம் இறைவனை விட்டு
min mith'qāli
مِن مِّثْقَالِ
of (the) weight
அளவு
dharratin
ذَرَّةٍ
(of) an atom
ஓர் அணு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
in the earth
பூமியில்
walā fī l-samāi
وَلَا فِى ٱلسَّمَآءِ
and not in the heavens
இன்னும் வானத்தில்
walā aṣghara
وَلَآ أَصْغَرَ
and not smaller
சிறிதும் இல்லை
min dhālika
مِن ذَٰلِكَ
than that
இதை விட
walā akbara
وَلَآ أَكْبَرَ
and not greater
இன்னும் பெரிதும் இல்லை
illā
إِلَّا
but
தவிர
fī kitābin
فِى كِتَٰبٍ
(is) in a Record
பதிவேட்டில்
mubīnin
مُّبِينٍ
clear
தெளிவான

Transliteration:

Wa maa takoonu fee shaaninw wa maa tatloo minhu min quraaninw wa laa ta'maloona min 'amalin illaa kunnaa 'alaikum shuhoodan iz tufeedoona feeh; wa maa ya'zubu 'ar Rabbika mim mis qaali zarratin fil ardi wa laa fis samaaa'i wa laaa asghara min zaalika wa laaa akbara illaa fee Kitaabim Mubeen (QS. al-Yūnus:61)

English Sahih International:

And, [O Muhammad], you are not [engaged] in any matter and do not recite any of the Quran and you [people] do not do any deed except that We are witness over you when you are involved in it. And not absent from your Lord is any [part] of an atom's weight within the earth or within the heaven or [anything] smaller than that or greater but that it is in a clear register. (QS. Yunus, Ayah ௬௧)

Abdul Hameed Baqavi:

நீங்கள் என்ன நிலைமையில் இருந்தபோதிலும், குர்ஆனிலிருந்து நீங்கள் எ(ந்த வசனத்)தை ஓதியபோதிலும், (உங்களுடைய காரியங்களில்) நீங்கள் எதைச் செய்தபோதிலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போதே உங்களை நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உங்களது இறைவனுக்குத் தெரியாமல் தவறிவிடுவதில்லை. இவற்றைவிட சிறிதோ அல்லது பெரிதோ (எதுவாயினும்) அவனுடைய விரிவான பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமலில்லை. (ஸூரத்து யூனுஸ், வசனம் ௬௧)

Jan Trust Foundation

நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், “குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைந்து விடுவதில்லை. இதை விடச் சிறியதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே) நீர் எந்த செயலில் இருந்தாலும், (அல்லாஹ்வின் வேதமாகிய) குர்ஆனிலிருந்து நீர் எதை ஓதினாலும், (மக்களே) நீங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் நீங்கள் அவற்றில் ஈடுபடும் போது உங்கள் மீது சாட்சிகளாக நாம் இருந்தே தவிர அவற்றை (நீங்கள் செய்யமாட்டீர்கள்). பூமியிலோ வானத்திலோ ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனை விட்டு மறையாது. இதைவிட சிறிதும் இல்லை பெரிதும் இல்லை (அவனுடைய) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர.