Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௫௮

Qur'an Surah Yunus Verse 58

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْيَفْرَحُوْاۗ هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ (يونس : ١٠)

qul
قُلْ
Say
கூறுவீராக
bifaḍli
بِفَضْلِ
"In the Bounty
அருளைக் கொண்டு
l-lahi
ٱللَّهِ
"(of) Allah
அல்லாஹ்வின்
wabiraḥmatihi
وَبِرَحْمَتِهِۦ
and in His Mercy
இன்னும் அவனது கருணையைக் கொண்டு
fabidhālika
فَبِذَٰلِكَ
so in that
இதைக் கொண்டே
falyafraḥū
فَلْيَفْرَحُوا۟
let them rejoice"
அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்
huwa
هُوَ
It
இது
khayrun
خَيْرٌ
(is) better
மிக மேலானது
mimmā
مِّمَّا
than what
எவை/விட
yajmaʿūna
يَجْمَعُونَ
they accumulate
சேகரிக்கிறார்கள்

Transliteration:

Qul bifadlil laahi wa birahmatihii fabizaalika falyaf rahoo huwa khairum mimmaa yajma'oon (QS. al-Yūnus:58)

English Sahih International:

Say, "In the bounty of Allah and in His mercy – in that let them rejoice; it is better than what they accumulate." (QS. Yunus, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

"(இதனை) அல்லாஹ்வின் அருளாகவும் அன்பாகவும் (பாவித்து) இதற்காக அவர்கள் சந்தோஷமடையட்டும். இது அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் (மற்ற பொருள்கள்) அனைத்தையும் விட மிக்க மேலானது" என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௫௮)

Jan Trust Foundation

“அல்லாஹ்வின் அருட்கொடையினாலும், அவனுடைய பெருங்கிருபையினாலுமே (இது வந்துள்ளது, எனவே) - இதில் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“(இந்த குர்ஆன்) அல்லாஹ்வின் அருளைக் கொண்டும் அவனுடைய கருணையைக் கொண்டும் (இறக்கப்பட்டது). ஆகவே, இதைக் கொண்டே அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். இது அவர்கள் சேகரிப்பவற்றை விட மிக மேலானது”என்று (நபியே) கூறுவீராக!