Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௫௦

Qur'an Surah Yunus Verse 50

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௫௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُهٗ بَيَاتًا اَوْ نَهَارًا مَّاذَا يَسْتَعْجِلُ مِنْهُ الْمُجْرِمُوْنَ (يونس : ١٠)

qul
قُلْ
Say
கூறுவீராக
ara-aytum
أَرَءَيْتُمْ
"Do you see
அறிவிப்பீர்களாக
in atākum
إِنْ أَتَىٰكُمْ
if comes to you
வந்தால்/உங்களுக்கு
ʿadhābuhu
عَذَابُهُۥ
His punishment
வேதனை/ அவனுடைய
bayātan
بَيَٰتًا
(by) night
இரவில்
aw
أَوْ
or
அல்லது
nahāran
نَهَارًا
(by) day
பகலில்
mādhā
مَّاذَا
what (portion)
எதை
yastaʿjilu
يَسْتَعْجِلُ
of it would (wish to) hasten
அவசரமாக தேடுகின்றனர்
min'hu
مِنْهُ
of it would (wish to) hasten
அதிலிருந்து
l-muj'rimūna
ٱلْمُجْرِمُونَ
the criminals?"
குற்றவாளிகள்

Transliteration:

Qul ara'aitum in ataakum 'azaabuhoo bayaatan aw nahaaram maazaa yasta'jilu minhul mujrimoon (QS. al-Yūnus:50)

English Sahih International:

Say, "Have you considered: if His punishment should come to you by night or by day – for which [aspect] of it would the criminals be impatient?" (QS. Yunus, Ayah ௫௦)

Abdul Hameed Baqavi:

(மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அவனுடைய வேதனை இரவிலோ பகலிலோ (எந்நேரத்திலாயினும்) உங்களிடம் வரும் பட்சத்தில் (அதனை நீங்கள் தடுத்துவிட முடியுமா என்பதைக்) கவனித்தீர்களா? (நபியே!) எதற்காக இக்குற்றவாளிகள் (வேதனை எப்பொழுது வரும்... எப்பொழுது வரும்... என்று கேட்டு) அவசரப்படுகின்றனர்?" (ஸூரத்து யூனுஸ், வசனம் ௫௦)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறுவீராக| “அவனுடைய வேதனை உங்களுக்கு இரவிலோ பகலிலோ வந்துவிடுமானால் - (அதைத் தடுத்துவிட முடியுமா? என்பதை) கவனித்தீர்களா? குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(மேலும்) கூறுவீராக: “அவனுடைய வேதனை இரவில் அல்லது பகலில் உங்களுக்கு வந்தால்... (அதை நீங்கள் தடுத்துவிட முடியுமா?) (நபியே!) எதை (இக்)குற்றவாளிகள் அவசரமாகத் தேடுகின்றனர்? என்று கூறுவீராக”