Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௪௯

Qur'an Surah Yunus Verse 49

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ لَّآ اَمْلِكُ لِنَفْسِيْ ضَرًّا وَّلَا نَفْعًا اِلَّا مَا شَاۤءَ اللّٰهُ ۗ لِكُلِّ اُمَّةٍ اَجَلٌ ۚاِذَا جَاۤءَ اَجَلُهُمْ فَلَا يَسْتَأْخِرُوْنَ سَاعَةً وَّلَا يَسْتَقْدِمُوْنَ (يونس : ١٠)

qul
قُل
Say
கூறுவீராக
lā amliku
لَّآ أَمْلِكُ
"Not I have power
உரிமை பெறமாட்டேன்
linafsī
لِنَفْسِى
for myself
எனக்கு
ḍarran
ضَرًّا
(for) any harm
தீமைக்கோ
walā nafʿan
وَلَا نَفْعًا
and not (for) any profit
இன்னும் நன்மைக்கோ
illā
إِلَّا
except
தவிர
مَا
what
எதை
shāa
شَآءَ
Allah wills
நாடினான்
l-lahu
ٱللَّهُۗ
Allah wills
அல்லாஹ்
likulli
لِكُلِّ
For every
ஒவ்வொரு
ummatin
أُمَّةٍ
nation
வகுப்பார்
ajalun
أَجَلٌۚ
(is) a term
தவணை
idhā jāa
إِذَا جَآءَ
When comes
வந்தால்
ajaluhum
أَجَلُهُمْ
their term
தவணை/அவர்களுடைய
falā yastakhirūna
فَلَا يَسْتَـْٔخِرُونَ
then not they remain behind
பிந்தமாட்டார்கள்
sāʿatan
سَاعَةًۖ
an hour
ஒரு சிறிது நேரம்
walā yastaqdimūna
وَلَا يَسْتَقْدِمُونَ
and not they can precede (it)"
இன்னும் முந்த மாட்டார்கள்

Transliteration:

Qul laaa amliku linafsee darranw wa laa naf'an illaa maa shaaa'al laah; likulli ummatin ajalun izaa jaaa'a ajaluhum falaaa yastaakhiroona saa'a tanw wa laa yastaqdimoon (QS. al-Yūnus:49)

English Sahih International:

Say, "I possess not for myself any harm or benefit except what Allah should will. For every nation is a [specified] term. When their time has come, then they will not remain behind an hour, nor will they precede [it]." (QS. Yunus, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

(அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ் நாடியதையன்றி யாதொரு நன்மையோ தீமையோ நான் எனக்கே தேடிக்கொள்ள சக்தியற்றவன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு குறிப்பிட்ட தவணையுண்டு. அவர்களுடைய தவணை வரும் சமயத்தில் ஒரு நாழிகையும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்." அத்தவணையில் அவர்கள் காரியம் முடிவு பெற்றுவிடும். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௪௯)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அதற்கு நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் நாடியதைத் தவிர (எவ்வித) தீமைக்கோ நன்மைக்கோ நான் எனக்கு உரிமை பெறமாட்டேன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு (குறிப்பிட்ட) தவணையுண்டு. அவர்களுடைய தவணை வந்தால் ஒரு சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.”