Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௪௭

Qur'an Surah Yunus Verse 47

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௪௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلِكُلِّ اُمَّةٍ رَّسُوْلٌ ۚفَاِذَا جَاۤءَ رَسُوْلُهُمْ قُضِيَ بَيْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُوْنَ (يونس : ١٠)

walikulli
وَلِكُلِّ
And for every
ஒவ்வொருவருக்கும்
ummatin
أُمَّةٍ
nation
ஒரு சமுதாயம்
rasūlun
رَّسُولٌۖ
(is) a Messenger
ஒரு தூதர்
fa-idhā
فَإِذَا
So when
போது
jāa
جَآءَ
comes
வரும்
rasūluhum
رَسُولُهُمْ
their Messenger
தூதர்/அவர்களுடைய
quḍiya
قُضِىَ
it will be judged
தீர்ப்பளிக்கப்படும்
baynahum
بَيْنَهُم
between them
அவர்களுக்கிடையில்
bil-qis'ṭi
بِٱلْقِسْطِ
in justice
நீதமாக
wahum
وَهُمْ
and they
இன்னும் அவர்கள்
lā yuẓ'lamūna
لَا يُظْلَمُونَ
(will) not be wronged
அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்

Transliteration:

Wa likulli ummatir Rasoolun fa izaa jaaa'a Rasooluhum qudiya bainahum bilqisti wa hum laa yuzlamoon (QS. al-Yūnus:47)

English Sahih International:

And for every nation is a messenger. So when their messenger comes, it will be judged between them in justice, and they will not be wronged. (QS. Yunus, Ayah ௪௭)

Abdul Hameed Baqavi:

ஒவ்வொரு வகுப்பினருக்கும் ஒரு தூதர் (நம்மால்) அனுப்பப்பட்டார்கள். அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வந்த சமயத்தில் (அவரைப் பின்பற்றியவர்களை பாதுகாத்தும், பொய்யாக்கியவர்களை அழித்தும்) அவர்களுக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களுக்கு (அணுவளவும்) அநியாயம் செய்யப்படவில்லை. (ஸூரத்து யூனுஸ், வசனம் ௪௭)

Jan Trust Foundation

ஒவ்வொரு சமூகத்தாருக்கும் (நாமனுப்பிய இறை) தூதர் உண்டு; அவர்களுடைய தூதர் (அவர்களிடம்) வரும்போது அவர்களுக்கிடையில் நியாயத்துடனேயே தீர்ப்பளிக்கப்படும் - அவர்கள் (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் (அனுப்பப்பட்டார்). அவர்களுடைய தூதர் (மறுமையில்) வரும்போது அவர்களுக்கிடையில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.