குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௪௧
Qur'an Surah Yunus Verse 41
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ لِّيْ عَمَلِيْ وَلَكُمْ عَمَلُكُمْۚ اَنْتُمْ بَرِيْۤـُٔوْنَ مِمَّآ اَعْمَلُ وَاَنَا۠ بَرِيْۤءٌ مِّمَّا تَعْمَلُوْنَ (يونس : ١٠)
- wa-in kadhabūka
- وَإِن كَذَّبُوكَ
- And if they deny you
- அவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
- faqul
- فَقُل
- then say
- கூறுவீராக
- lī
- لِّى
- "For me
- எனக்கு
- ʿamalī
- عَمَلِى
- (are) my deeds
- என் செயல்
- walakum
- وَلَكُمْ
- and for you
- இன்னும் உங்களுக்கு
- ʿamalukum
- عَمَلُكُمْۖ
- (are) your deeds
- உங்கள் செயல்
- antum
- أَنتُم
- You
- நீங்கள்
- barīūna
- بَرِيٓـُٔونَ
- (are) disassociated
- நீங்கியவர்கள்
- mimmā
- مِمَّآ
- from what
- எதிலிருந்து
- aʿmalu
- أَعْمَلُ
- I do
- செய்கிறேன்
- wa-anā
- وَأَنَا۠
- and I am
- இன்னும் நான்
- barīon
- بَرِىٓءٌ
- disassociated
- நீங்கியவன்
- mimmā
- مِّمَّا
- from what
- எதிலிருந்து
- taʿmalūna
- تَعْمَلُونَ
- you do"
- நீங்கள் செய்கிறீர்கள்
Transliteration:
Wa in kazzabooka faqul lee 'amalee wa lakum 'amalukum antum bareee'oona mimmaaa a'malu wa ana bareee'um mimmaa ta'maloon(QS. al-Yūnus:41)
English Sahih International:
And if they deny you, [O Muhammad], then say, "For me are my deeds, and for you are your deeds. You are disassociated from what I do, and I am disassociated from what you do." (QS. Yunus, Ayah ௪௧)
Abdul Hameed Baqavi:
(நபியே!) உங்களை பொய்யரென அவர்கள் கூறினால் (நீங்கள் அவர்களை நோக்கி "நன்மையோ தீமையோ) என் செய்கை(யின் பலன்) எனக்குரியது; (அவ்வாறே) உங்கள் செய்கை(யின் பலன்) உங்களுக்குரியது. என் செய்கையி(ன் பலனி)லிருந்து நீங்கள் விடுபட்டவர்கள்; உங்கள் செய்கையி(ன் பலனி)லிருந்து நான் விடுபட்டவன்" என்று கூறுங்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௪௧)
Jan Trust Foundation
உம்மை அவர்கள் பொய்ப்படுத்தினால் எனது செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு. நான் செய்வதை விட்டும் நீங்கள் விலகியவர்கள்; நீங்கள் செய்வதை விட்டும் நான் விலகியவன் என்று கூறுவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) உம்மை அவர்கள் பொய்ப்பித்தால், “என் செயல் எனக்கு; உங்கள் செயல் உங்களுக்கு; நான் செய்வதிலிருந்து நீங்கள் நீங்கியவர்கள்; நீங்கள் செய்வதிலிருந்து நான் நீங்கியவன்”என்று கூறுவீராக!