Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௪௦

Qur'an Surah Yunus Verse 40

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمِنْهُمْ مَّنْ يُّؤْمِنُ بِهٖ وَمِنْهُمْ مَّنْ لَّا يُؤْمِنُ بِهٖۗ وَرَبُّكَ اَعْلَمُ بِالْمُفْسِدِيْنَ ࣖ (يونس : ١٠)

wamin'hum
وَمِنْهُم
And of them
அவர்களில்
man
مَّن
(is one) who
எவர்
yu'minu
يُؤْمِنُ
believes
நம்பிக்கைகொண்டார்
bihi
بِهِۦ
in it
அதை
wamin'hum
وَمِنْهُم
and of them
இன்னும் அவர்களில்
man
مَّن
(is one) who
எவர்
lā yu'minu
لَّا يُؤْمِنُ
(does) not believe
நம்பிக்கை கொள்ளமாட்டார்
bihi
بِهِۦۚ
in it
அதை
warabbuka
وَرَبُّكَ
And your Lord
உம் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
(is) All-Knower
மிக அறிந்தவன்
bil-muf'sidīna
بِٱلْمُفْسِدِينَ
of the corrupters
விஷமிகளை

Transliteration:

Wa minhum mai yu 'minu bihee wa minhum mal laa yu'minu bih; wa Rabbuka a'lamu bilmufsideen (QS. al-Yūnus:40)

English Sahih International:

And of them are those who believe in it, and of them are those who do not believe in it. And your Lord is most knowing of the corrupters. (QS. Yunus, Ayah ௪௦)

Abdul Hameed Baqavi:

(திருக்குர்ஆனில் கூறப்பட்டவை நிகழுமென) அதனை நம்பக்கூடியவரும் அவர்களில் உள்ளனர்; (நிகழ்ந்த பின்னரும்) அதனை நம்பாதவரும் அவர்களில் உள்ளனர். (அதனை நம்பாத) இந்த விஷமிகளை உங்கள் இறைவன் நன்கறிந்து கொள்வான். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௪௦)

Jan Trust Foundation

அவர்களில் இதன் மீது ஈமான் கொண்டவர்களும் இருக்கின்றனர்; இதன் மீது ஈமான் கொள்ளாதோரும் இருக்கின்றனர் - இன்னும், உங்கள் இறைவன் விஷமம் செய்பவர்களை நன்றாக அறிகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அதை (-குர்ஆனை) நம்பிக்கை கொள்பவரும் அவர்களில் உண்டு; அதை நம்பிக்கை கொள்ளாதவரும் அவர்களில் உண்டு. விஷமிகளை உம் இறைவன் மிக அறிந்தவன்.