குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௩௯
Qur'an Surah Yunus Verse 39
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
بَلْ كَذَّبُوْا بِمَا لَمْ يُحِيْطُوْا بِعِلْمِهٖ وَلَمَّا يَأْتِهِمْ تَأْوِيْلُهٗۗ كَذٰلِكَ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِيْنَ (يونس : ١٠)
- bal
- بَلْ
- Nay
- மாறாக
- kadhabū
- كَذَّبُوا۟
- they denied
- பொய்ப்பித்தனர்
- bimā lam yuḥīṭū
- بِمَا لَمْ يُحِيطُوا۟
- what not they could encompass
- எதை/அவர்கள் சூழ்ந்தறியவில்லை
- biʿil'mihi
- بِعِلْمِهِۦ
- (of) its knowledge
- அதன் அறிவு
- walammā yatihim
- وَلَمَّا يَأْتِهِمْ
- and not has come (to) them
- இன்னும் வரவில்லை/இவர்களுக்கு
- tawīluhu
- تَأْوِيلُهُۥۚ
- its interpretation
- அதன் விளக்கம்
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- இவ்வாறே
- kadhaba
- كَذَّبَ
- denied
- பொய்ப்பித்தனர்
- alladhīna min qablihim
- ٱلَّذِينَ مِن قَبْلِهِمْۖ
- those before them before them
- எவர்கள்/முன்னர்/இவர்களுக்கு
- fa-unẓur
- فَٱنظُرْ
- then see
- ஆகவே கவனிப்பீராக
- kayfa kāna
- كَيْفَ كَانَ
- how was
- எவ்வாறு இருந்தது
- ʿāqibatu
- عَٰقِبَةُ
- (the) end
- முடிவு
- l-ẓālimīna
- ٱلظَّٰلِمِينَ
- (of) the wrongdoers
- அநியாயக்காரர்களின்
Transliteration:
Bal kazzaboo bimaa lam yuheetoo bi'ilmihee wa lammaa yaatihim taaweeluh; kazaalika kazzabal lazeena min qablihim fanzur kaifa kaana 'aaqibatuz zaalimeen(QS. al-Yūnus:39)
English Sahih International:
Rather, they have denied that which they encompass not in knowledge and whose interpretation has not yet come to them. Thus did those before them deny. Then observe how was the end of the wrongdoers. (QS. Yunus, Ayah ௩௯)
Abdul Hameed Baqavi:
அவர்கள் தங்கள் அறிவால் தெரிந்து கொள்ள முடியாததையும், (நிகழுமென) அதில் கூறப்பட்டவை நிகழாதிருக்கையில் அவற்றையும் (அதில் கூறப்பட்ட மற்றவைகளையும்) பொய்யென அவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (தங்கள் அறிவுக்கு எட்டாததையும், தாங்கள் காணாததையும்) பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தனர். ஆகவே, அந்த அநியாயக்காரர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௩௯)
Jan Trust Foundation
அப்படியல்ல; அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள்; இவர்களுக்கு முன் இருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறிந்து கொள்ள முடியாதவற்றை) பொய்ப்பித்தார்கள். ஆகவே அந்த அநியாயக்காரர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் நோக்குவீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மாறாக, எதன் அறிவை அவர்கள் சூழ்ந்தறியவில்லையோ அதைப் பொய்ப்பித்தனர். அதன் விளக்கம் இன்னும் இவர்களுக்கு வரவில்லை. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (தாங்கள் அறியாததை) பொய்ப்பித்தனர். ஆகவே, அநியாயக்காரர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக!