Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௩௮

Qur'an Surah Yunus Verse 38

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰىهُ ۗ قُلْ فَأْتُوْا بِسُوْرَةٍ مِّثْلِهٖ وَادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ (يونس : ١٠)

am
أَمْ
Or
அல்லது
yaqūlūna
يَقُولُونَ
(do) they say
அவர்கள் கூறுகின்றனர்
if'tarāhu
ٱفْتَرَىٰهُۖ
"He has invented it?"
இதை இட்டுக்கட்டினார்
qul
قُلْ
Say
கூறுவீராக
fatū
فَأْتُوا۟
"Then bring
வாருங்கள்
bisūratin
بِسُورَةٍ
a Surah
ஒர் அத்தியாயத்தைக் கொண்டு
mith'lihi
مِّثْلِهِۦ
like it
அது போன்ற
wa-id'ʿū
وَٱدْعُوا۟
and call
இன்னும் அழையுங்கள்
mani
مَنِ
whoever
எவர்
is'taṭaʿtum
ٱسْتَطَعْتُم
you can
சாத்தியமானீர்கள்
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِ
besides Allah besides Allah besides Allah
அல்லாஹ்வையன்றி
in kuntum
إِن كُنتُمْ
if you are
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
truthful"
உண்மை சொல்பவர்களாக

Transliteration:

Am yaqooloonaf taraahu qul faatoo bisooratim mislihee wad'oo manis tata'tum min doonil laahi in kuntum saadiqeen (QS. al-Yūnus:38)

English Sahih International:

Or do they say [about the Prophet (r)], "He invented it?" Say, "Then bring forth a Surah like it and call upon [for assistance] whomever you can besides Allah, if you should be truthful." (QS. Yunus, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

இதனை (நம்முடைய தூதராகிய) "அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்" என அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின் நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சாத்தியமானவர்கள் அனைவரையும் (உங்களுக்குத் துணையாக) அழைத்துக்கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து,) இதிலுள்ளதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்." (ஸூரத்து யூனுஸ், வசனம் ௩௮)

Jan Trust Foundation

இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்| “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இதை (நம் தூதர்) “இட்டுக்கட்டினார்” என அவர்கள் கூறுகின்றனரா? (நபியே!) கூறுவீராக! “நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சாத்தியமானவர்களை அழையுங்கள், அது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்.”