குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௩௭
Qur'an Surah Yunus Verse 37
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا كَانَ هٰذَا الْقُرْاٰنُ اَنْ يُّفْتَرٰى مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ تَصْدِيْقَ الَّذِيْ بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ الْكِتٰبِ لَا رَيْبَ فِيْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِيْنَۗ (يونس : ١٠)
- wamā kāna
- وَمَا كَانَ
- And not is
- இல்லை
- hādhā l-qur'ānu
- هَٰذَا ٱلْقُرْءَانُ
- this the Quran
- இந்த குர்ஆன்
- an yuf'tarā
- أَن يُفْتَرَىٰ
- that (it could be) produced
- இட்டுக்கட்டப்பட்டதாக
- min dūni
- مِن دُونِ
- by other than Allah
- இருந்து/அல்லாதவர்
- l-lahi
- ٱللَّهِ
- other than Allah
- அல்லாஹ்
- walākin
- وَلَٰكِن
- but
- எனினும்
- taṣdīqa
- تَصْدِيقَ
- (it is) a confirmation
- உண்மைப்படுத்துதல்
- alladhī
- ٱلَّذِى
- (of that) which
- எவற்றை
- bayna yadayhi
- بَيْنَ يَدَيْهِ
- (was) before it (was) before it
- தனக்கு முன்னால்
- watafṣīla
- وَتَفْصِيلَ
- and a detailed explanation
- இன்னும் விவரித்துக் கூறுதல்
- l-kitābi
- ٱلْكِتَٰبِ
- (of) the Book
- சட்டங்களை
- lā rayba
- لَا رَيْبَ
- (there is) no doubt
- அறவே சந்தேகம் இல்லை
- fīhi
- فِيهِ
- in it
- இதில்
- min
- مِن
- from
- இருந்து
- rabbi
- رَّبِّ
- (the) Lord
- இறைவன்
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- (of) the worlds
- அகிலங்களின்
Transliteration:
Wa maa kaana haazal Quraanu ai yuftaraa min doonil laahi wa laakin tasdeeqal lazee baina yadaihi wa tafseelal Kitaabi laa raiba fee mir Rabbil 'aalameen(QS. al-Yūnus:37)
English Sahih International:
And it was not [possible] for this Quran to be produced by other than Allah, but [it is] a confirmation of what was before it and a detailed explanation of the [former] Scripture, about which there is no doubt, from the Lord of the worlds. (QS. Yunus, Ayah ௩௭)
Abdul Hameed Baqavi:
இந்தக் குர்ஆன் அல்லாஹ்வினால் (அருளப்பட்டதே) அன்றி (மற்ற எவராலும்) பொய்யாகக் கற்பனை செய்யப்பட்டதன்று. தவிர, இது இதற்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைத்து அவைகளில் உள்ளவற்றை விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது. ஆகவே, (இது) உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனிடமிருந்து வந்தது என்பதில் அறவே சந்தேகமில்லை. (ஸூரத்து யூனுஸ், வசனம் ௩௭)
Jan Trust Foundation
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து வந்தது என்பதில் சந்தேகமேயில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து இட்டுக்கட்டப்பட்டதாக இல்லை. எனினும், இது (வேதங்களில்) தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்தி, (மார்க்க) சட்டங்களை விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது. இதில், (இது) அகிலங்களின் இறைவனிடமிருந்து வந்தது என்பதில் அறவே சந்தேகமில்லை.