Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௩௪

Qur'an Surah Yunus Verse 34

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ هَلْ مِنْ شُرَكَاۤىِٕكُمْ مَّنْ يَّبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗۗ قُلِ اللّٰهُ يَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ فَاَنّٰى تُؤْفَكُوْنَ (يونس : ١٠)

qul
قُلْ
Say
கூறுவீராக
hal min shurakāikum
هَلْ مِن شُرَكَآئِكُم
"Is (there) of your partners
?/ இருந்து/இணைதெய்வங்கள்/உங்கள்
man
مَّن
(any) who
எவன்
yabda-u
يَبْدَؤُا۟
originates
ஆரம்பிக்கிறான்
l-khalqa
ٱلْخَلْقَ
the creation
படைப்புகளை
thumma
ثُمَّ
then
பிறகு
yuʿīduhu
يُعِيدُهُۥۚ
repeats it?"
மீட்கிறான்/அவற்றை
quli
قُلِ
Say
கூறுவீராக
l-lahu
ٱللَّهُ
"Allah
அல்லாஹ்தான்
yabda-u
يَبْدَؤُا۟
originates
ஆரம்பிக்கிறான்
l-khalqa
ٱلْخَلْقَ
the creation
படைப்புகளை
thumma
ثُمَّ
then
பிறகு
yuʿīduhu
يُعِيدُهُۥۖ
repeats it
மீட்கிறான்/அவற்றை
fa-annā
فَأَنَّىٰ
So how
எவ்வாறு?
tu'fakūna
تُؤْفَكُونَ
you are deluded?"
நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்

Transliteration:

Qul hal min shurakaaa 'ikum mai yabda'ul khalqa suma yu'eeduh; qulil laahu yabda'ul khalqa summa yu'eeduhoo fa annaa tu'fakoon (QS. al-Yūnus:34)

English Sahih International:

Say, "Are there of your 'partners' any who begins creation and then repeats it?" Say, "Allah begins creation and then repeats it, so how are you deluded?" (QS. Yunus, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

(அன்றி அவர்களை நோக்கி) "புதிதாக படைப்புகளை உண்டுபண்ணக் கூடியதும் (மரித்த பின்) அவைகளை உயிர்ப்பிக்கக் கூடியதும் நீங்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?" என்று (நபியே!) நீங்கள் கேளுங்கள். (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீங்களே அவர்களை நோக்கி) "படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறவனும் (அவை மரணித்த) பின்னர் அவற்றை உயிர்ப்பிக்கக்கூடியவனும் அல்லாஹ்தான்" (என்று கூறி "இந்த உண்மையை விட்டு) நீங்கள் எங்குச் செல்கின்றீர்கள்?" என்றும் கேளுங்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௩௪)

Jan Trust Foundation

உங்களால் இணையாக்கப்பட்டவர்களில் முதன் முதலில் சிருஷ்டிகளை படைப்பவனும் பிறகு அவைகளை திரும்பப் படைப்பவனும் இருக்கின்றார்களா, என்று (நபியே!) நீர் கேட்பீராக; அல்லாஹ்தான் முதன் முதலில் சிருஷ்டிகளை படைக்கிறான், பிறகு அவைகளை மீண்டும் படைக்கிறான்; நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள் என்று கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

“படைப்புகளை ஆரம்பித்து, (அவை இறந்த) பிறகு, அவற்றை மீட்பவன் உங்கள் இணை தெய்வங்களில் (யாரும்) உண்டா?” என்று (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்தான் படைப்புகளை ஆரம்பிக்கிறான். பிறகு அவற்றை (உயிர்க் கொடுத்து) மீட்கிறான்.” (நம்பிக்கை கொள்வதிலிருந்து) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்?” என்று (நபியே) கூறுவீராக!