குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௩௧
Qur'an Surah Yunus Verse 31
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ مَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَاۤءِ وَالْاَرْضِ اَمَّنْ يَّمْلِكُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَمَنْ يُّخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُّدَبِّرُ الْاَمْرَۗ فَسَيَقُوْلُوْنَ اللّٰهُ ۚفَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ (يونس : ١٠)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- man
- مَن
- "Who
- யார்
- yarzuqukum
- يَرْزُقُكُم
- provides for you
- உணவளிக்கிறார்/உங்களுக்கு
- mina l-samāi
- مِّنَ ٱلسَّمَآءِ
- from the sky
- வானத்திலிருந்து
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- and the earth?
- இன்னும் பூமி
- amman
- أَمَّن
- Or who
- அல்லது யார்
- yamliku
- يَمْلِكُ
- controls
- உரிமை கொள்வார்
- l-samʿa
- ٱلسَّمْعَ
- the hearing
- செவி
- wal-abṣāra
- وَٱلْأَبْصَٰرَ
- and the sight?
- இன்னும் பார்வைகள்
- waman
- وَمَن
- And who
- இன்னும் யார்?
- yukh'riju
- يُخْرِجُ
- brings out
- வெளிப்படுத்துவார்
- l-ḥaya
- ٱلْحَىَّ
- the living
- உயிருள்ளதை
- mina l-mayiti
- مِنَ ٱلْمَيِّتِ
- from the dead
- இறந்ததிலிருந்து
- wayukh'riju
- وَيُخْرِجُ
- and brings forth
- இன்னும் வெளிப்படுத்துவார்
- l-mayita
- ٱلْمَيِّتَ
- the dead
- இறந்ததை
- mina l-ḥayi
- مِنَ ٱلْحَىِّ
- from the living?
- உயிருள்ளதிலிருந்து
- waman
- وَمَن
- And who
- இன்னும் யார்?
- yudabbiru
- يُدَبِّرُ
- disposes
- நிர்வகிக்கிறான்
- l-amra
- ٱلْأَمْرَۚ
- the affairs?"
- காரியத்தை
- fasayaqūlūna
- فَسَيَقُولُونَ
- Then they will say
- கூறுவார்கள்
- l-lahu
- ٱللَّهُۚ
- "Allah"
- அல்லாஹ்
- faqul
- فَقُلْ
- Then say
- கூறுவீராக
- afalā tattaqūna
- أَفَلَا تَتَّقُونَ
- "Then will not you fear (Him)?"
- நீங்கள் அஞ்ச வேண்டாமா?
Transliteration:
Qul mai yarzuqukum minas samaaa'i wal ardi ammany yamlikus sam'a wal absaara wa mai yukhrijul haiya minal maiyiti wa yikhrijul maiyita minal haiyi wa mai yudabbirul amr; fasa yaqooloonal laah; faqul afalaa tattaqoon(QS. al-Yūnus:31)
English Sahih International:
Say, "Who provides for you from the heaven and the earth? Or who controls hearing and sight and who brings the living out of the dead and brings the dead out of the living and who arranges [every] matter?" They will say, "Allah," so say, "Then will you not fear Him?" (QS. Yunus, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் (அவர்களை நோக்கி) "வானத்திலிருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? (உங்களுடைய) செவிக்கும் பார்வைகளுக்கும் உரிமையாளன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (உலகின்) எல்லா காரியங்களையும் திட்டமிட்டு நிகழ்த்துபவன் யார்?" என்று கேளுங்கள்! அதற்கவர்கள் "அல்லாஹ்தான்" என்று கூறுவார்கள். அவ்வாறாயின் (அவனுக்கு) நீங்கள் பயப்பட வேண்டாமா?" என்று கேளுங்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௩௧)
Jan Trust Foundation
“உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும், (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அனைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?” என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் “அல்லாஹ்” என பதிலளிப்பார்கள்; “அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?” என்று நீர் கேட்பீராக.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) “வானம், பூமியிலிருந்து உங்களுக்கு யார் உணவளிக்கிறார்? அல்லது (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் யார் உரிமை கொள்வார்? இறந்ததிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் யார் வெளிப்படுத்துவார்? யார் (எல்லா) காரியத்தை(யும்) நிர்வகிக்கிறான்?” என்று கூறுவீராக! அதற்கு, “அல்லாஹ்தான்”என்று கூறுவார்கள். (அவ்வாறாயின் அல்லாஹ்வை) நீங்கள் அஞ்சவேண்டாமா?” என்று கூறுவீராக!