குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௩௦
Qur'an Surah Yunus Verse 30
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هُنَالِكَ تَبْلُوْا كُلُّ نَفْسٍ مَّآ اَسْلَفَتْ وَرُدُّوْٓا اِلَى اللّٰهِ مَوْلٰىهُمُ الْحَقِّ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ ࣖ (يونس : ١٠)
- hunālika
- هُنَالِكَ
- There
- அங்கு
- tablū
- تَبْلُوا۟
- will be put to trial
- சோதிக்கும்
- kullu
- كُلُّ
- every
- ஒவ்வொரு
- nafsin
- نَفْسٍ
- soul
- ஆத்மா
- mā
- مَّآ
- (for) what
- எவற்றை
- aslafat
- أَسْلَفَتْۚ
- it did previously
- அது முன்செய்தது
- waruddū
- وَرُدُّوٓا۟
- and they will be returned
- இன்னும் அவர்கள் கொண்டு வரப்படுவார்கள்
- ilā l-lahi
- إِلَى ٱللَّهِ
- to Allah
- அல்லாஹ்வின் பக்கம்
- mawlāhumu
- مَوْلَىٰهُمُ
- their Lord
- தங்கள் எஜமானன்
- l-ḥaqi
- ٱلْحَقِّۖ
- the true
- உண்மையானவன்
- waḍalla
- وَضَلَّ
- and will be lost
- இன்னும் மறைந்துவிடும்
- ʿanhum
- عَنْهُم
- from them
- அவர்களை விட்டு
- mā
- مَّا
- what
- எது
- kānū
- كَانُوا۟
- they used (to)
- இருந்தனர்
- yaftarūna
- يَفْتَرُونَ
- invent
- இட்டுக்கட்டுகின்றனர்
Transliteration:
Hunaalika tabloo kullu nafsim maaa aslafat; wa ruddoo ilal laahi mawlaahu mul haqqi wa dalla 'anhum maa kaanoo yaftaroon(QS. al-Yūnus:30)
English Sahih International:
There, [on that Day], every soul will be put to trial for what it did previously, and they will be returned to Allah, their master, the Truth, and lost from them is whatever they used to invent. (QS. Yunus, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
அங்கு ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த செயலைச் சோதித்து (அது நன்மையா? தீமையா? என்பதை) அறிந்து கொள்ளும். பின்னர், அவர்கள் தங்களுடைய உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கமே கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்த தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௩௦)
Jan Trust Foundation
அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் - பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் - அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அங்கு ஒவ்வொரு ஆத்மாவும் தான் முன் செய்தவற்றைச் சோதிக்கும். அவர்கள் தங்கள் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கம் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை அவர்களை விட்டு மறைந்துவிடும்.