Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௨௮

Qur'an Surah Yunus Verse 28

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௨௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِيْنَ اَشْرَكُوْا مَكَانَكُمْ اَنْتُمْ وَشُرَكَاۤؤُكُمْۚ فَزَيَّلْنَا بَيْنَهُمْ وَقَالَ شُرَكَاۤؤُهُمْ مَّا كُنْتُمْ اِيَّانَا تَعْبُدُوْنَ (يونس : ١٠)

wayawma
وَيَوْمَ
And (the) Day
நாளில்
naḥshuruhum
نَحْشُرُهُمْ
We will gather them
ஒன்று சேர்ப்போம் அவர்கள்
jamīʿan
جَمِيعًا
all together
அனைவரையும்
thumma
ثُمَّ
then
பிறகு
naqūlu
نَقُولُ
We will say
கூறுவோம்
lilladhīna
لِلَّذِينَ
to those who
எவர்களுக்கு
ashrakū
أَشْرَكُوا۟
associate partners (with Allah)
இணைவைத்தனர்
makānakum
مَكَانَكُمْ
"(Remain in) your place
உங்கள் இடத்தில்
antum
أَنتُمْ
you
நீங்களும்
washurakāukum
وَشُرَكَآؤُكُمْۚ
and your partners"
இன்னும் இணைகள் உங்கள்
fazayyalnā
فَزَيَّلْنَا
Then We will separate
நீக்கி விடுவோம்
baynahum
بَيْنَهُمْۖ
[between] them
அவர்களுக்கிடையில்
waqāla
وَقَالَ
and (will) say
இன்னும் கூறுவார்
shurakāuhum
شُرَكَآؤُهُم
their partners
இணை(தெய்வங்)கள் அவர்களுடைய
mā kuntum
مَّا كُنتُمْ
"Not you used (to)
நீங்கள் இருக்கவில்லை
iyyānā
إِيَّانَا
worship us"
எங்களை
taʿbudūna
تَعْبُدُونَ
worship us"
வணங்குகிறீர்கள்

Transliteration:

Wa yawma nahshuruhum jamee'an summa naqoolu lillazeena ashrakoo makaanakum antum wa shurakaaa'ukum; fazaiyalnaa bainahum wa qaala shurakaaa'uhum maa kuntum iyyaanaa ta'budoon (QS. al-Yūnus:28)

English Sahih International:

And [mention, O Muhammad], the Day We will gather them all together – then We will say to those who associated others with Allah, "[Remain in] your place, you and your 'partners.'" Then We will separate them, and their "partners" will say, "You did not used to worship us, (QS. Yunus, Ayah ௨௮)

Abdul Hameed Baqavi:

(விசாரணைக்காக) அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களில் இணை வைத்து வணங்கியவர்களை நோக்கி "நீங்களும் நீங்கள் இணைவைத்து வணங்கிய தெய்வங்களும் சிறிது இங்கு தாமதியுங்கள்" என்று கூறி அவர்களுக்கிடையில் இருந்த தொடர்பை நீக்கி விடுவோம். அச்சமயம் அவர்களுடைய தெய்வங்கள் (என்று கற்பனையாக வணங்கி வந்த அவைகள்) அவர்களை நோக்கி "நீங்கள் எங்களை வணங்கவே இல்லை" என்றும், (ஸூரத்து யூனுஸ், வசனம் ௨௮)

Jan Trust Foundation

(இன்னும் - விசாரணைக்காக) நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்க்கும் நாளில் இணைவைத்தவர்களை நோக்கி| “நீங்களும், நீங்கள் இணைவைத்து வணங்கியவையும் உங்கள் இடத்திலேயே (சிறிது தாமதித்து) இருங்கள்” என்று சொல்வோம்; பின்பு அவர்களிடையேயிருந்த தொடர்பை நீக்கிவிடுவோம் - அப்போது அவர்களால் இணைவைக்கப்பட்டவைகள்” நீங்கள் எங்களை வணங்கவேயில்லை” என்று கூறிவிடும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில்... பிறகு, இணை வைத்தவர்களை நோக்கி “நீங்களும் உங்கள் இணை(தெய்வங்)களும் உங்கள் இடத்திலேயே (தாமதியுங்கள்)” என்று கூறுவோம். அவர்களுக்கிடையில் (தொடர்பை) நீக்கி விடுவோம். (அப்போது) “நீங்கள் எங்களை வணங்கி கொண்டிருக்கவில்லை” என்று அவர்களுடைய இணை(தெய்வங்)கள் கூறும்.