Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௨௭

Qur'an Surah Yunus Verse 27

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالَّذِيْنَ كَسَبُوا السَّيِّاٰتِ جَزَاۤءُ سَيِّئَةٍ ۢبِمِثْلِهَاۙ وَتَرْهَقُهُمْ ذِلَّةٌ ۗمَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍۚ كَاَنَّمَآ اُغْشِيَتْ وُجُوْهُهُمْ قِطَعًا مِّنَ الَّيْلِ مُظْلِمًاۗ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚهُمْ فِيْهَا خٰلِدُوْنَ (يونس : ١٠)

wa-alladhīna
وَٱلَّذِينَ
And those who
எவர்கள்
kasabū
كَسَبُوا۟
earned
செய்தனர்
l-sayiāti
ٱلسَّيِّـَٔاتِ
the evil deeds
தீமைகளை
jazāu sayyi-atin
جَزَآءُ سَيِّئَةٍۭ
(the) recompense (of) an evil deed
கூலி/தீமையின்
bimith'lihā
بِمِثْلِهَا
(is) like it
அது போன்றதைக் கொண்டு
watarhaquhum
وَتَرْهَقُهُمْ
and (will) cover them
இன்னும் சூழும்/அவர்களை
dhillatun
ذِلَّةٌۖ
humiliation
இழிவு
مَّا
They will not have
இல்லை
lahum
لَهُم
They will not have
அவர்களுக்கு
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
from Allah
அல்லாஹ்விடமிருந்து
min ʿāṣimin
مِنْ عَاصِمٍۖ
any defender
பாதுகாப்பவர் ஒருவரும்
ka-annamā
كَأَنَّمَآ
As if
போன்று
ugh'shiyat
أُغْشِيَتْ
had been covered
சூழப்பட்டன
wujūhuhum
وُجُوهُهُمْ
their faces
அவர்களுடைய முகங்கள்
qiṭaʿan
قِطَعًا
(with) pieces
ஒரு பாகத்தால்
mina al-layli
مِّنَ ٱلَّيْلِ
from the darkness (of) night
இரவின்
muẓ'liman
مُظْلِمًاۚ
the darkness (of) night
இருண்டது
ulāika
أُو۟لَٰٓئِكَ
Those
அவர்கள்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
(are the) companions (of) the Fire
நரகவாசிகள்
hum
هُمْ
they
அவர்கள்
fīhā
فِيهَا
in it
அதில்
khālidūna
خَٰلِدُونَ
(will) abide forever
நிரந்தரமானவர்கள்

Transliteration:

Wallazeena kasabus saiyi aati jazaaa'u saiyi'atim bimislihaa wa tarhaquhum zillah; maa lahum minal laahi min 'aasimin ka annamaaa ughshiyat wujoohuhum qita 'am minal laili muzlimaa; ulaaa'ika Ashaabun Naari hum feeha khaalidoon (QS. al-Yūnus:27)

English Sahih International:

But they who have earned [blame for] evil doings – the recompense of an evil deed is its equivalent, and humiliation will cover them. They will have from Allah no protector. It will be as if their faces are covered with pieces of the night – so dark [are they]. Those are the companions of the Fire; they will abide therein eternally. (QS. Yunus, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

தீமைகளை எவர்கள் செய்தபோதிலும் தீமைக்குரிய கூலி அதைப்போன்ற தீமையே! அவர்களை நிந்தனையும் வந்தடையும். அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருவருமில்லை. இருண்ட இரவின் ஒரு பாகம் வந்து சூழ்ந்து கொண்டதைப்போல் அவர்களுடைய முகங்கள் (கருப்பாகக்) காணப்படும். அவர்கள் நரகவாசிகள்தாம். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௨௭)

Jan Trust Foundation

ஆனால் தீமையைச் சம்பாதிப்பவர்களுக்கு, (அவர்கள் செய்த) தீமைக்குக் கூலியாக அதுபோன்ற தீமையாகும்! அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும்; அவர்களை அல்லாஹ்வின் (தண்டனையை) விட்டுக் காப்பாற்றுபவர் எவருமிலர்; இருண்ட இருளையுடைய இரவின் ஒருபாகம் அவர்கள் முகங்களைச் சூழ்ந்து சுற்றிக் கொள்ளப்பட்டது போல் (அவர்களின்) முகங்கள் காணப்படும். அவர்கள் நரக நெருப்புக்கு உரியவர்கள். அவர்கள் அங்கேயே என்றென்றும் இருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

தீமைகளை செய்தவர்கள் தீமையின் கூலி(யாக) அது போன்ற(தீய)தைக் கொண்டுதான் (கொடுக்கப்படுவார்கள்)! அவர்களை இழிவு சூழும். அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பவர் ஒருவரும் அவர்களுக்கு இல்லை. இருண்ட இரவின் ஒரு பாகத்தால் அவர்களுடைய முகங்கள் சூழப்பட்டதைப் போன்று (கருமையாக) இருக்கும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமானவர்கள்.