குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௨௬
Qur'an Surah Yunus Verse 26
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ لِلَّذِيْنَ اَحْسَنُوا الْحُسْنٰى وَزِيَادَةٌ ۗوَلَا يَرْهَقُ وُجُوْهَهُمْ قَتَرٌ وَّلَا ذِلَّةٌ ۗاُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ (يونس : ١٠)
- lilladhīna
- لِّلَّذِينَ
- For those who
- எவர்களுக்கு
- aḥsanū
- أَحْسَنُوا۟
- do good
- நல்லறம் புரிந்தனர்
- l-ḥus'nā
- ٱلْحُسْنَىٰ
- (is) the best
- மிக அழகிய கூலி
- waziyādatun
- وَزِيَادَةٌۖ
- and more
- இன்னும் அதிகம்
- walā yarhaqu
- وَلَا يَرْهَقُ
- And not (will) cover
- இன்னும் சூழாது
- wujūhahum
- وُجُوهَهُمْ
- their faces
- அவர்களுடைய முகங்கள்
- qatarun
- قَتَرٌ
- dust
- கவலை
- walā dhillatun
- وَلَا ذِلَّةٌۚ
- and not humiliation
- அவர்கள் இழிவு
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- அவர்கள்
- aṣḥābu l-janati
- أَصْحَٰبُ ٱلْجَنَّةِۖ
- (are the) companions (of) Paradise
- சொர்க்கவாசிகள்
- hum fīhā
- هُمْ فِيهَا
- they in it
- அவர்கள்/அதில்
- khālidūna
- خَٰلِدُونَ
- (will) abide forever
- நிரந்தரமானவர்கள்
Transliteration:
Lillazeena ahsanul husnaa wa ziyaadahtunw wa laa yarhaqu wujoohahum qatarunw wa laa zillah; ulaaa'ika ashaabul jannnati hum feehaa khaalidoon(QS. al-Yūnus:26)
English Sahih International:
For them who have done good is the best [reward] – and extra. No darkness will cover their faces, nor humiliation. Those are companions of Paradise; they will abide therein eternally. (QS. Yunus, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
நன்மை செய்தவர்களுக்கு(க் கூலி) நன்மைதான். (அவர்கள் செய்ததை விட) அதிகமாகவும் கிடைக்கும். (அதனால் அவர்கள் மிக்க ஆனந்தம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.) அவர்கள் முகங்களை கவலையோ அல்லது இழிவோ சூழ்ந்துகொள்ளாது. நிச்சயமாக அவர்கள் சுவனவாசிகளே. அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௨௬)
Jan Trust Foundation
நன்மை புரிந்தோருக்கு (உரிய கூலி) நன்மையும், மேலும் அதைவிட அதிகமும் கிடைக்கும்; அவர்களின் முகங்களை இருளோ, இழிவோ சூழ்ந்து இருக்காது, அவர்கள் தாம் சுவனபதிக்கு உரியவர்கள் - அதிலேயே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நல்லறம் புரிந்தவர்களுக்கு மிக அழகிய கூலியும் (இறையருளில் இன்னும்) அதிகமும் உண்டு. அவர்களுடைய முகங்களை (எவ்வித) கவலையும் இழிவும் சூழாது. அவர்கள் சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமானவர்கள்.