குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௨௨
Qur'an Surah Yunus Verse 22
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هُوَ الَّذِيْ يُسَيِّرُكُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِۗ حَتّٰٓى اِذَا كُنْتُمْ فِىْ الْفُلْكِۚ وَجَرَيْنَ بِهِمْ بِرِيْحٍ طَيِّبَةٍ وَّفَرِحُوْا بِهَا جَاۤءَتْهَا رِيْحٌ عَاصِفٌ وَّجَاۤءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَّظَنُّوْٓا اَنَّهُمْ اُحِيْطَ بِهِمْۙ دَعَوُا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ەۚ لَىِٕنْ اَنْجَيْتَنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ (يونس : ١٠)
- huwa alladhī
- هُوَ ٱلَّذِى
- He (is) the One Who
- அவன்/எத்தகையவன்
- yusayyirukum
- يُسَيِّرُكُمْ
- enables you to travel
- பயணிக்கவைக்கிறான் உங்களை
- fī l-bari
- فِى ٱلْبَرِّ
- in the land
- நிலத்திலும்
- wal-baḥri
- وَٱلْبَحْرِۖ
- and the sea
- இன்னும் நீரிலும்
- ḥattā
- حَتَّىٰٓ
- until
- இறுதியாக
- idhā
- إِذَا
- when
- போது
- kuntum
- كُنتُمْ
- you are
- இருக்கின்றீர்கள்
- fī l-ful'ki
- فِى ٱلْفُلْكِ
- in the ships
- கப்பல்களில்
- wajarayna
- وَجَرَيْنَ
- and they sail
- இன்னும் பயணித்தன
- bihim
- بِهِم
- with them
- அவர்களை சுமந்து
- birīḥin
- بِرِيحٍ
- with a wind
- ஒரு காற்றால்
- ṭayyibatin
- طَيِّبَةٍ
- good
- நல்ல
- wafariḥū
- وَفَرِحُوا۟
- and they rejoice
- இன்னும் அவர்கள் மகிழ்ந்தனர்
- bihā
- بِهَا
- therein
- அதன்மூலம்
- jāathā
- جَآءَتْهَا
- comes to it
- வந்தது/அவற்றுக்கு
- rīḥun
- رِيحٌ
- a wind
- காற்று
- ʿāṣifun
- عَاصِفٌ
- stormy
- புயல்
- wajāahumu
- وَجَآءَهُمُ
- and comes to them
- இன்னும் வந்தன அவர்களுக்கு
- l-mawju
- ٱلْمَوْجُ
- the waves
- அலைகள்
- min
- مِن
- from
- இருந்து
- kulli
- كُلِّ
- every
- எல்லா
- makānin
- مَكَانٍ
- place
- இடம்
- waẓannū
- وَظَنُّوٓا۟
- and they assume
- இன்னும் அவர்கள் எண்ணினர்
- annahum
- أَنَّهُمْ
- that they
- நிச்சயமாக தாம்
- uḥīṭa
- أُحِيطَ
- are surrounded
- அழிக்கப்பட்டோம்
- bihim
- بِهِمْۙ
- with them
- தாம்
- daʿawū
- دَعَوُا۟
- They call
- அவர்கள் அழைக்கின்றனர்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- mukh'liṣīna
- مُخْلِصِينَ
- sincerely
- தூய்மைப்படுத்தியவர்களாக
- lahu
- لَهُ
- to Him
- அவனுக்கு
- l-dīna
- ٱلدِّينَ
- (in) the religion
- வழிபாட்டை
- la-in anjaytanā
- لَئِنْ أَنجَيْتَنَا
- (saying) If You save us
- நீ பாதுகாத்தால்/எங்களை
- min hādhihi
- مِنْ هَٰذِهِۦ
- from this
- இதிலிருந்து
- lanakūnanna
- لَنَكُونَنَّ
- surely we will be
- நிச்சயமாக இருப்போம்
- mina l-shākirīna
- مِنَ ٱلشَّٰكِرِينَ
- among the thankful"
- நன்றி செலுத்துபவர்களில்
Transliteration:
Huwal lazee yusaiyirukum fil barri walbahri hattaaa izaa kuntum fil fulki wa jaraina bihim bireeh in taiyibatinw wa farihoo bihaa jaaa'at haa reehun 'aasifunw wa jaaa'ahumul mawju min kulli makaaninw wa zannooo annahum uheeta bihim da'awul laaha mukhliseena lahud deena la'in anjaitanaa min haazihee lanakoonannna minash shaakireen(QS. al-Yūnus:22)
English Sahih International:
It is He who enables you to travel on land and sea until, when you are in ships and they sail with them by a good wind and they rejoice therein, there comes a storm wind and the waves come upon them from every place and they expect to be engulfed, they supplicate Allah, sincere to Him in religion, "If You should save us from this, we will surely be among the thankful." (QS. Yunus, Ayah ௨௨)
Abdul Hameed Baqavi:
நீரிலும் நிலத்திலும் அவனே உங்களை அழைத்துச் செல்கிறான். நீங்கள் கப்பலில் ஏறிய பின்னர் கப்பலில் உள்ளவர்களை நல்ல காற்று நடத்திச் செல்வதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கும் சமயத்தில், புயல் காற்று அடிக்க ஆரம்பித்து நாலா பக்கங்களில் இருந்தும் அவர்களை அலைகள் வந்து மோதி "நிச்சயமாக நாம் (அலைகளால்) சூழ்ந்து கொள்ளப்பட்டோம்; (இதிலிருந்து தப்ப நமக்கு யாதொரு வழியுமில்லை)" என்று அவர்கள் எண்ணும் சமயத்தில் (நம்மை நோக்கி "எங்கள் இறைவனே!) இதிலிருந்து நீ எங்களை பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் உனக்கு என்றென்றும் நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்" என்று கலப்பற்ற மனதினராக அல்லாஹ்வை வழிபட்டு (மிக்கத் தாழ்மையுடன் அழுது கூக்குரலிட்டுப்) பிரார்த்திக்கிறார்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௨௨)
Jan Trust Foundation
அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சுமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)” என்று எண்ணுகிறார்கள்; அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், “நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்” என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிலத்திலும் நீரிலும் உங்களை அவன்தான் பயணிக்க வைக்கிறான். இறுதியாக நீங்கள் கப்பல்களில் இருக்க, நல்ல காற்றால் (அவை) அவர்களை சுமந்து பயணித்தன, அதன்மூலம் அவர்கள் மகிழ்ந்தனர். (இந்நிலையில்) அவற்றுக்கு புயல் காற்று வந்தது. எல்லா இடத்திலிருந்தும் அவர்களுக்கு அலைகள் (சூழ்ந்து) வர, “நிச்சயமாக தாம் அழிக்கப்பட்டோம்”என்று அவர்கள் எண்ணியபோது, “(அல்லாஹ்வே!) இதிலிருந்து நீ எங்களைப் பாதுகாத்தால் நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துபவர்களில் இருப்போம்” என்று அவனுக்கு வழிபாட்டை தூய்மைப்படுத்தியவர்களாக அல்லாஹ்வை அவர்கள் அழைக்கின்றனர்.