குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௨௧
Qur'an Surah Yunus Verse 21
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَآ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّنْۢ بَعْدِ ضَرَّاۤءَ مَسَّتْهُمْ اِذَا لَهُمْ مَّكْرٌ فِيْٓ اٰيٰتِنَاۗ قُلِ اللّٰهُ اَسْرَعُ مَكْرًاۗ اِنَّ رُسُلَنَا يَكْتُبُوْنَ مَا تَمْكُرُوْنَ (يونس : ١٠)
- wa-idhā adhaqnā
- وَإِذَآ أَذَقْنَا
- And when We let [the] mankind taste
- நாம் சுவைக்க வைத்தால்
- l-nāsa
- ٱلنَّاسَ
- We let [the] mankind taste
- மனிதர்களுக்கு
- raḥmatan
- رَحْمَةً
- mercy
- ஒரு கருணையை
- min baʿdi
- مِّنۢ بَعْدِ
- after after
- பின்னர்
- ḍarrāa
- ضَرَّآءَ
- adversity
- ஒரு துன்பம்
- massathum
- مَسَّتْهُمْ
- has touched them
- தீண்டியது/தங்களை
- idhā
- إِذَا
- behold!
- அப்போது
- lahum
- لَهُم
- They have
- அவர்களுக்கு
- makrun
- مَّكْرٌ
- a plot
- ஒரு சூழ்ச்சி
- fī āyātinā
- فِىٓ ءَايَاتِنَاۚ
- against Our Verses
- வசனங்களில்/நம்
- quli
- قُلِ
- Say
- கூறுவீராக
- l-lahu
- ٱللَّهُ
- "Allah
- அல்லாஹ்
- asraʿu
- أَسْرَعُ
- (is) more swift
- மிகத் தீவிரமானவன்
- makran
- مَكْرًاۚ
- (in) planning"
- சூழ்ச்சி செய்வதில்
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- rusulanā
- رُسُلَنَا
- Our Messengers
- நம் தூதர்கள்
- yaktubūna
- يَكْتُبُونَ
- write down
- பதிவு செய்கிறார்கள்
- mā
- مَا
- what
- எதை
- tamkurūna
- تَمْكُرُونَ
- you plot
- நீங்கள் சூழ்ச்சி செய்கிறீர்கள்
Transliteration:
Wa izaaa azaqnan naasa rahmatam mim ba'di darraaa'a massat hum izaa lahum makrun feee aayaatinaa; qulil laahu asra'u makraa; inna rusulanaa yaktuboona maa tamkuroon(QS. al-Yūnus:21)
English Sahih International:
And when We give the people a taste of mercy after adversity has touched them, at once they conspire against Our verses. Say, "Allah is swifter in strategy." Indeed, Our messengers [i.e., angels] record that which you conspire. (QS. Yunus, Ayah ௨௧)
Abdul Hameed Baqavi:
(இம்)மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போக்கி (பின்னர் நம்) அருளைக் கொண்டு அவர்கள் இன்பமடையும்படி நாம் செய்தால் (அதற்கு அவர்கள் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக) உடனே அவர்கள் நம் வசனங்களில் (தவறான அர்த்தம் கற்பிக்க) சூழ்ச்சி செய்கின்றனர். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி "உங்கள் சூழ்ச்சியைவிட) அல்லாஹ்வின் சூழ்ச்சி முந்திக் கொள்ளும்!" என்று கூறுங்கள். நிச்சயமாக நம்முடைய தூதர்(களாகிய மலக்கு)கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௨௧)
Jan Trust Foundation
மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப்பின், அவர்களை (நம் ரஹ்மத்தை) கிருபையை - அனுபவிக்கும்படி நாம் செய்தால், உடனே அவர்கள் நமது வசனங்களில் கேலி செய்வதே அவர்களுக்கு (வழக்கமாக) இருக்கிறது; “திட்டமிடுவதில் அல்லாஹ்வே மிகவும் தீவிரமானவன்” என்று அவர்களிடம் (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நீங்கள் சூழ்ச்சி செய்து திட்டமிடுவதை யெல்லாம் எம் தூதர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மனிதர்களுக்கு தங்களைத் தீண்டிய ஒரு துன்பத்திற்கு பின்னர் ஒரு கருணையை நாம் சுவைக்க வைத்தால், அப்போது அவர்களுக்கு நம் வசனங்களில் ஒரு சூழ்ச்சி (சிந்தனை தோன்றுகிறது). (நபியே!) அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் மிகத் தீவிரமானவன்”என்று கூறுவீராக! நிச்சயமாக நம் (வானவத்) தூதர்கள் நீங்கள் சூழ்ச்சி செய்வதைப் பதிவு செய்கிறார்கள்.