குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௧௨
Qur'an Surah Yunus Verse 12
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِذَا مَسَّ الْاِنْسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنْۢبِهٖٓ اَوْ قَاعِدًا اَوْ قَاۤىِٕمًا ۚفَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهٗ مَرَّ كَاَنْ لَّمْ يَدْعُنَآ اِلٰى ضُرٍّ مَّسَّهٗۗ كَذٰلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِيْنَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ (يونس : ١٠)
- wa-idhā massa
- وَإِذَا مَسَّ
- And when touches
- தீண்டினால்
- l-insāna
- ٱلْإِنسَٰنَ
- the man
- மனிதனை
- l-ḍuru
- ٱلضُّرُّ
- the affliction
- துன்பம்
- daʿānā
- دَعَانَا
- he calls Us
- பிரார்த்திக்கிறான் நம்மிடம்
- lijanbihi
- لِجَنۢبِهِۦٓ
- (lying) on his side
- அவன் தன் விலாவின் மீது
- aw
- أَوْ
- or
- அல்லது
- qāʿidan
- قَاعِدًا
- sitting
- உட்கார்ந்தவனாக
- aw
- أَوْ
- or
- அல்லது
- qāiman
- قَآئِمًا
- standing
- நின்றவனாக
- falammā kashafnā
- فَلَمَّا كَشَفْنَا
- But when We remove
- நாம் நீக்கிவிட்டபோது
- ʿanhu
- عَنْهُ
- from him
- அவனை விட்டு
- ḍurrahu
- ضُرَّهُۥ
- his affliction
- அவனுடைய துன்பத்தை
- marra
- مَرَّ
- he passes on
- செல்கின்றான்
- ka-an lam yadʿunā
- كَأَن لَّمْ يَدْعُنَآ
- as if he (had) not called Us
- அவன் நம்மை அழைக்காதது போன்று
- ilā ḍurrin
- إِلَىٰ ضُرٍّ
- for (the) affliction
- துன்பத்திற்கு
- massahu
- مَّسَّهُۥۚ
- (that) touched him
- தீண்டியது/அவனை
- kadhālika
- كَذَٰلِكَ
- Thus
- இவ்வாறு
- zuyyina
- زُيِّنَ
- (it) is made fair seeming
- அலங்கரிக்கப்பட்டன
- lil'mus'rifīna
- لِلْمُسْرِفِينَ
- to the extravagant
- வரம்பு மீறிகளுக்கு
- mā
- مَا
- what
- எவை
- kānū
- كَانُوا۟
- they used (to)
- இருந்தனர்
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- do
- செய்கின்றனர்
Transliteration:
Wa izaa massal insaanad durru da'aanaa lijambiheee aw qaa'idan aw qaaa'iman falammaa kashafnaa 'anhu durrahoo marra ka al lam yad'unaaa ilaa durrim massah; kazaalika zuyyina lilmusrifeena maa kaanoo ya'maloon(QS. al-Yūnus:12)
English Sahih International:
And when affliction touches man, he calls upon Us, whether lying on his side or sitting or standing; but when We remove from him his affliction, he continues [in disobedience] as if he had never called upon Us to [remove] an affliction that touched him. Thus is made pleasing to the transgressors that which they have been doing. (QS. Yunus, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
மனிதனுக்கு யாதொரு தீங்கேற்பட்டால் (அதனை நீக்கும்படி) அவன் தன்னுடைய (படுத்த) படுக்கையிலும், (உட்கார்ந்த) இருப்பிலும், (நின்ற) நிலையிலும் நம்மிடமே பிரார்த்திக்கிறான். ஆனால், அவனுடைய துன்பத்தை நாம் நீக்கிவிட்டாலோ அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கும்படி நம்மிடம் பிரார்த்தனையே செய்யாதவனைப் போல் (புறக்கணித்துச்) சென்றுவிடுகிறான். வரம்பு மீறும் (இவர்களுக்கு) இவர்கள் செய்யும் காரியங்கள் இவ்வாறு அழகாக்கப்பட்டு விட்டன. (ஸூரத்து யூனுஸ், வசனம் ௧௨)
Jan Trust Foundation
மனிதனை (ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக்கொண்டோ, அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கின்றான், ஆனால் நாம் அவனை விட்டும் அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மனிதனை துன்பம் தீண்டினால் அவன் தன் விலாவின் மீது (சாய்ந்தவனாக), அல்லது உட்கார்ந்தவனாக, அல்லது நின்றவனாக நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனை விட்டு அவனுடைய துன்பத்தை நாம் நீக்கிவிட்டபோது அவன் தன்னை தீண்டிய துன்பத்திற்கு நம்மை அழைக்காதது போன்று செல்கிறான். வரம்புமீறிகளுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை இவ்வாறு அலங்கரிக்கப்பட்டன.