குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௧௦௮
Qur'an Surah Yunus Verse 108
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௧௦௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قُلْ يٰٓاَيُّهَا النَّاسُ قَدْ جَاۤءَكُمُ الْحَقُّ مِنْ رَّبِّكُمْ ۚفَمَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِيْ لِنَفْسِهٖ ۚوَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚوَمَآ اَنَا۠ عَلَيْكُمْ بِوَكِيْلٍۗ (يونس : ١٠)
- qul
- قُلْ
- Say
- கூறுவீராக
- yāayyuhā l-nāsu
- يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
- "O mankind! "O mankind!
- மக்களே
- qad
- قَدْ
- Verily
- வந்து விட்டது
- jāakumu
- جَآءَكُمُ
- has come to you
- உங்களுக்கு
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- the truth
- உண்மை
- min
- مِن
- from
- இருந்து
- rabbikum
- رَّبِّكُمْۖ
- your Lord
- உங்கள் இறைவன்
- famani
- فَمَنِ
- So whoever
- எவர்
- ih'tadā
- ٱهْتَدَىٰ
- (is) guided
- நேர்வழி சென்றார்
- fa-innamā yahtadī
- فَإِنَّمَا يَهْتَدِى
- then only (he is) guided
- அவர் நேர்வழி செல்வதெல்லாம்
- linafsihi
- لِنَفْسِهِۦۖ
- for his soul
- தன் நன்மைக்காகவே
- waman
- وَمَن
- and whoever
- இன்னும் எவர்
- ḍalla
- ضَلَّ
- goes astray
- வழிகெட்டார்
- fa-innamā yaḍillu
- فَإِنَّمَا يَضِلُّ
- then only he strays
- அவர் வழிகெடுவதெல்லாம்
- ʿalayhā
- عَلَيْهَاۖ
- against it
- தனக்குக்கேடாகத்தான்
- wamā anā
- وَمَآ أَنَا۠
- And I am not And I am not
- இல்லை/நான்
- ʿalaykum
- عَلَيْكُم
- over you
- உங்கள் மீது
- biwakīlin
- بِوَكِيلٍ
- a guardian"
- பொறுப்பாளனாக
Transliteration:
Qul yaaa aiyuhan naasu qad jaaa'akumul haqqu mir Rabbikum famanih tadaa fa innamaa yahtadee linafsihee wa man dalla fa innamaa yadillu 'alaihaa wa maaa ana 'alaikum biwakeel(QS. al-Yūnus:108)
English Sahih International:
Say, "O mankind, the truth has come to you from your Lord, so whoever is guided is only guided for [the benefit of] his soul, and whoever goes astray only goes astray [in violation] against it. And I am not over you a manager." (QS. Yunus, Ayah ௧௦௮)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே இந்தச் சத்திய வேதம் உங்களிடம் வந்திருக்கிறது. எவன் (இதனைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே அந்த நேரான வழியில் செல்கிறான். எவன் (இதனைப் பின்பற்றாது) வழிதப்பி விடுகிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடான வழியிலேயே செல்கிறான். அன்றி, நான் உங்களை (நிர்ப்பந்தித்து) நிர்வகிக்கத் தக்க அதிகாரம் பெற்றவனல்லன். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௧௦௮)
Jan Trust Foundation
(நபியே!) நீர் கூறுவீராக| “மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு சத்திய(வேத)ம் வந்துவிட்டது; எனவே யார் (அதைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறாரோ அவர் தம் நன்மைக்காகவே அந்நேர்வழியில் செல்கின்றார்; எவர் (அதை ஏற்க மறுத்து) வழி தவறினாரோ, நிச்சயமாக அவர் தமக்குக் கேடான வழியிலே செல்கிறார்; நான் (உங்களைக் கட்டாயப்படுத்தி) உங்கள் காரியங்களை நிர்வகிக்க அதிகாரம் பெற்றவனல்லன்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! “மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து உண்மை (வேதம்) உங்களுக்கு வந்துவிட்டது. எவர் (அதன் படி) நேர்வழி சென்றாரோ அவர் நேர்வழி செல்வதெல்லாம் தன் நன்மைக்காகவே. எவர் வழிகெட்டாரோ அவர் வழிகெடுவதெல்லாம் தனக்குக் கேடாகத்தான். நான் உங்கள் மீது பொறுப்பாளனாக இல்லை.