Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௧௦௪

Qur'an Surah Yunus Verse 104

ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௧௦௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ يٰٓاَيُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِيْ شَكٍّ مِّنْ دِيْنِيْ فَلَآ اَعْبُدُ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ اَعْبُدُ اللّٰهَ الَّذِيْ يَتَوَفّٰىكُمْ ۖ وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ (يونس : ١٠)

qul
قُلْ
Say
கூறுவீராக
yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
"O mankind! "O mankind!
மக்களே
in kuntum
إِن كُنتُمْ
If you are
நீங்கள் இருந்தால்
fī shakkin
فِى شَكٍّ
in doubt
சந்தேகத்தில்
min dīnī
مِّن دِينِى
of my religion
என் மார்க்கத்தில்
falā aʿbudu
فَلَآ أَعْبُدُ
then not I worship
நான் வணங்கமாட்டேன்
alladhīna
ٱلَّذِينَ
those whom
எவர்களை
taʿbudūna
تَعْبُدُونَ
you worship
நீங்கள் வணங்குகிறீர்கள்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
besides Allah besides Allah besides Allah
அல்லாஹ்வையன்றி
walākin
وَلَٰكِنْ
but
எனினும்
aʿbudu
أَعْبُدُ
I worship
வணங்குவேன்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வைத்தான்
alladhī
ٱلَّذِى
the One Who
எத்தகையவன்
yatawaffākum
يَتَوَفَّىٰكُمْۖ
causes you to die
உயிர் கைப்பற்றுகிறான்/உங்களை
wa-umir'tu
وَأُمِرْتُ
And I am commanded
இன்னும் கட்டளையிடப் பட்டேன்
an akūna
أَنْ أَكُونَ
that I be
நான் ஆகவேண்டுமென்று
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
of the believers"
நம்பிக்கையாளர்களில்

Transliteration:

Qul yaaa ayyuhan naasu in kuntum fee shakkkim min deenee falaa a'budul lazeena ta'budoona min doonil laahi wa laakin a'budul laahal lazee yatawaffaakum wa umirtu an akoona minal mu'mineen (QS. al-Yūnus:104)

English Sahih International:

Say, [O Muhammad], "O people, if you are in doubt as to my religion – then I do not worship those which you worship besides Allah; but I worship Allah, who causes your death. And I have been commanded to be of the believers (QS. Yunus, Ayah ௧௦௪)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! நீங்கள் என்னுடைய மார்க்கத்தில் சந்தேகம் கொண்டபோதிலும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கு பவைகளை நான் எக்காலத்திலும் வணங்கப்போவதில்லை. எனினும், உங்கள் அனைவருடைய உயிரையும் கைப்பற்றும் (சக்தி பெற்ற) அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கையாளர்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டுமென்றே கட்டளையிடப் பட்டுள்ளேன். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௧௦௪)

Jan Trust Foundation

“மனிதர்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகம் கொண்டிருந்தால், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்கமாட்டேன்; ஆனால் உங்களை மரணிக்கச் செய்யும் அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன், நான் முஃமின்களில் ஒருவனாக இருக்குமாறு ஏவப்பட்டுள்ளேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! “மக்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்க மாட்டேன். எனினும், உங்கள் உயிரைக் கைப்பற்றுகிற அல்லாஹ்வைத்தான் வணங்குவேன். நம்பிக்கையாளர்களில் நான் ஆகவேண்டுமென்று கட்டளையிடப்பட்டேன்.