குர்ஆன் ஸூரா ஸூரத்து யூனுஸ் வசனம் ௧௦
Qur'an Surah Yunus Verse 10
ஸூரத்து யூனுஸ் [௧௦]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
دَعْوٰىهُمْ فِيْهَا سُبْحٰنَكَ اللهم وَتَحِيَّتُهُمْ فِيْهَا سَلٰمٌۚ وَاٰخِرُ دَعْوٰىهُمْ اَنِ الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَ ࣖ (يونس : ١٠)
- daʿwāhum fīhā
- دَعْوَىٰهُمْ فِيهَا
- Their prayer therein
- அவர்களின் பிரார்த்தனை/அதில்
- sub'ḥānaka
- سُبْحَٰنَكَ
- (will be) Glory be to You
- நீ மிகப் பரிசுத்தமானவன்
- l-lahuma
- ٱللَّهُمَّ
- O Allah!"
- அல்லாஹ்வே
- wataḥiyyatuhum
- وَتَحِيَّتُهُمْ
- And their greeting
- இன்னும் அவர்களின் முகமன்
- fīhā
- فِيهَا
- therein (will be)
- அதில்
- salāmun
- سَلَٰمٌۚ
- "Peace"
- ஸலாம்
- waākhiru
- وَءَاخِرُ
- And the last
- இறுதி
- daʿwāhum
- دَعْوَىٰهُمْ
- (of) their call
- பிரார்த்தனையின்/அவர்களுடைய
- ani l-ḥamdu
- أَنِ ٱلْحَمْدُ
- (will be) [that] "All the Praise be
- நிச்சயமாக புகழ்
- lillahi
- لِلَّهِ
- to Allah
- அல்லாஹ்வுக்கே
- rabbi
- رَبِّ
- Lord
- இறைவன்
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- (of) the worlds"
- அகிலங்களின்
Transliteration:
Da'waahum feehaa Subbaanakal laahumma wa tahiyyatuhum feehaa salaam; wa aakhiru da'waahum anil hamdu lillaahi Rabbil 'aalameen(QS. al-Yūnus:10)
English Sahih International:
Their call therein will be, "Exalted are You, O Allah," and their greeting therein will be, "Peace." And the last of their call will be, "Praise to Allah, Lord of the worlds!" (QS. Yunus, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
அதில் அவர்கள் (நுழைந்ததும்) "எங்கள் இறைவனே! நீ மிகப் பரிசுத்தமானவன்; (நீ மிகப் பரிசுத்தமானவன்)" என்று கூறுவார்கள். அதில் (தங்கள் தோழர்களைச் சந்திக்கும்போதெல்லாம்) "ஸலாமுன் (அலைக்கும்)" என்று முகமன் கூறுவார்கள். முடிவில் "புகழனைத்தும் உலகம் அனைத்தையும் படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்துபவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமானது" என்று புகழ்ந்து துதி செய்து கொண்டிருப்பார்கள். (ஸூரத்து யூனுஸ், வசனம் ௧௦)
Jan Trust Foundation
அதில் அவர்கள்| “(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசுத்தமானவன்” என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். “எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே” என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகவும் இருக்கும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அதில் அவர்களின் பிரார்த்தனை, “அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன்” என்பதாகும். அதில் அவர்களின் முகமன் “ஸலாம்” ஆகும். அவர்களுடைய பிரார்த்தனையின் இறுதி “நிச்சயமாக புகழ் (அனைத்தும்) அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வுக்கே சொந்தமானது”என்று இருக்கும்.