Skip to content

ஸூரா ஸூரத்து யூனுஸ் - Page: 6

Yunus

(al-Yūnus)

௫௧

اَثُمَّ اِذَا مَا وَقَعَ اٰمَنْتُمْ بِهٖۗ اٰۤلْـٰٔنَ وَقَدْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ ٥١

athumma
أَثُمَّ
?/@மீஸலி
idhā mā waqaʿa
إِذَا مَا وَقَعَ
நிகழ்ந்தால்
āmantum
ءَامَنتُم
நம்பிக்கை கொள்வீர்கள்
bihi
بِهِۦٓۚ
அதைக் கொண்டு
āl'āna
ءَآلْـَٰٔنَ
இப்போதுதானா?
waqad kuntum
وَقَدْ كُنتُم
திட்டமாக நீங்கள் இருந்தீர்கள்
bihi
بِهِۦ
அதை
tastaʿjilūna
تَسْتَعْجِلُونَ
அவசரப்பட்டுக் கொண்டிருந்தீர்கள்!
"(இப்பொழுது நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருக்கும்) அது வந்ததன் பின்னரா அதனை நீங்கள் நம்புவீர்கள்? (அச்சமயம் நீங்கள் அதனை நம்புவதில் பயனொன்றும் இல்லை.) நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்தது இதோ வந்துவிட்டது!" (என்றுதான் அந்நேரத்தில் கூறப்படும்.) ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௫௧)
Tafseer
௫௨

ثُمَّ قِيْلَ لِلَّذِيْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ الْخُلْدِۚ هَلْ تُجْزَوْنَ اِلَّا بِمَا كُنْتُمْ تَكْسِبُوْنَ ٥٢

thumma
ثُمَّ
பிறகு
qīla
قِيلَ
கூறப்பட்டது
lilladhīna ẓalamū
لِلَّذِينَ ظَلَمُوا۟
அநியாயம் செய்தவர்களை நோக்கி
dhūqū
ذُوقُوا۟
சுவையுங்கள்
ʿadhāba l-khul'di
عَذَابَ ٱلْخُلْدِ
நிலையான வேதனை
hal tuj'zawna
هَلْ تُجْزَوْنَ
நீங்கள் கூலி கொடுக்கப்படுகிறீர்களா?
illā
إِلَّا
தவிர
bimā
بِمَا
எதற்கு
kuntum taksibūna
كُنتُمْ تَكْسِبُونَ
நீங்கள் இருந்தீர்கள்/செய்கிறீர்கள்
அன்றி, இந்த அநியாயக்காரர்களை நோக்கி "நிலையான இந்த வேதனையை சுவைத்துக் கொண்டிருங்கள். நீங்கள் தேடிக்கொண்ட (தீய) செயலுக்குத் தகுதியான கூலியே உங்களுக்குக் கொடுக்கப்பட்டது" என்றும் கூறப்படும். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௫௨)
Tafseer
௫௩

وَيَسْتَنْۢبِـُٔوْنَكَ اَحَقٌّ هُوَ ۗ قُلْ اِيْ وَرَبِّيْٓ اِنَّهٗ لَحَقٌّ ۗوَمَآ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ ࣖ ٥٣

wayastanbiūnaka
وَيَسْتَنۢبِـُٔونَكَ
அவர்கள் செய்தி கேட்கின்றனர்/உம்மிடம்
aḥaqqun
أَحَقٌّ
உண்மைதானா?
huwa
هُوَۖ
அது
qul
قُلْ
கூறுவீராக
ī
إِى
ஆம்
warabbī
وَرَبِّىٓ
என் இறைவன் மீது சத்தியமாக
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அது
laḥaqqun
لَحَقٌّۖ
உண்மைதான்
wamā antum
وَمَآ أَنتُم
நீங்கள் அல்லர்
bimuʿ'jizīna
بِمُعْجِزِينَ
பலவீனப்படுத்துபவர்கள்
(நபியே!) "அது உண்மைதானா?" என்று அவர்கள் உங்களிடம் வினவுகின்றனர். அதற்கு நீங்கள் கூறுங்கள்: "மெய்தான்! என் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அது உண்மைதான். (அதனை) நீங்கள் தடுத்துவிட முடியாது." ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௫௩)
Tafseer
௫௪

وَلَوْ اَنَّ لِكُلِّ نَفْسٍ ظَلَمَتْ مَا فِى الْاَرْضِ لَافْتَدَتْ بِهٖۗ وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَۚ وَقُضِيَ بَيْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُوْنَ ٥٤

walaw anna
وَلَوْ أَنَّ
இருந்தால்
likulli nafsin
لِكُلِّ نَفْسٍ
ஒவ்வோர் ஆன்மாவிற்கும்
ẓalamat
ظَلَمَتْ
அநியாயம் செய்தது
mā fī l-arḍi
مَا فِى ٱلْأَرْضِ
எவை/பூமியில்
la-if'tadat
لَٱفْتَدَتْ
பரிகாரமாகக் கொடுத்துவிடும்
bihi
بِهِۦۗ
அவற்றை
wa-asarrū
وَأَسَرُّوا۟
இன்னும் மறைத்துக் கொள்வார்கள்
l-nadāmata
ٱلنَّدَامَةَ
துக்கத்தை
lammā ra-awū
لَمَّا رَأَوُا۟
போது/அவர்கள் கண்டனர்
l-ʿadhāba
ٱلْعَذَابَۖ
வேதனையை
waquḍiya
وَقُضِىَ
இன்னும் தீர்ப்பளிக்கப்பட்டது
baynahum
بَيْنَهُم
அவர்களுக்கு மத்தியில்
bil-qis'ṭi wahum
بِٱلْقِسْطِۚ وَهُمْ
நீதமாக/அவர்கள்
lā yuẓ'lamūna
لَا يُظْلَمُونَ
அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
நம்முடைய வேதனையைக் கண்ணால் காணும் அந்நேரத்தில் அநியாயம் செய்த ஒவ்வொரு ஆத்மாவிடமும் உலகத்தில் உள்ள (பொருள்) அனைத்தும் இருந்தபோதிலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்து விடக் கருதும்! தவிர, தன்னுடைய துக்கத்தை மறைத்துக்கொள்ளவும் கருதும். (அந்நாளில்) அவைகளுக்கு நீதமாகவே தீர்ப்பளிக்கப்படும்; (அணுவளவும்) அவை அநியாயம் செய்யப்பட மாட்டாது. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௫௪)
Tafseer
௫௫

اَلَآ اِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ اَلَآ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ ٥٥

alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
inna
إِنَّ
நிச்சயமாக
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை
wal-arḍi
وَٱلْأَرْضِۗ
இன்னும் பூமியில்
alā
أَلَآ
அறிந்து கொள்ளுங்கள்
inna
إِنَّ
நிச்சயமாக
waʿda
وَعْدَ
வாக்குறுதி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வுடைய
ḥaqqun
حَقٌّ
உண்மையானது
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
aktharahum
أَكْثَرَهُمْ
அதிகமானவர்(கள்) அவர்களில்
lā yaʿlamūna
لَا يَعْلَمُونَ
அறியமாட்டார்கள்
(மனிதர்களே!) வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்குரியன என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்பதையும் நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். எனினும் (மனிதர்களில்) பலர் இதனை நம்புவதில்லை. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௫௫)
Tafseer
௫௬

هُوَ يُحْيٖ وَيُمِيْتُ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ ٥٦

huwa
هُوَ
அவன்தான்
yuḥ'yī
يُحْىِۦ
உயிர்ப்பிக்கிறான்
wayumītu
وَيُمِيتُ
இன்னும் மரணிக்கச் செய்கிறான்
wa-ilayhi
وَإِلَيْهِ
இன்னும் அவனிடமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
நீங்கள் திருப்பப்படுவீர்கள்
அவனே (உங்களை) உயிர்ப்பித்தான்; அவனே (உங்களை) மரணிக்கச் செய்கிறான். பின்னர் அவனிடமே (மறுமையில்) நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௫௬)
Tafseer
௫௭

يٰٓاَيُّهَا النَّاسُ قَدْ جَاۤءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَاۤءٌ لِّمَا فِى الصُّدُوْرِۙ وَهُدًى وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِيْنَ ٥٧

yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மனிதர்களே
qad
قَدْ
திட்டமாக
jāatkum
جَآءَتْكُم
வந்தது/உங்களுக்கு
mawʿiẓatun
مَّوْعِظَةٌ
நல்லுபதேசம்
min
مِّن
இருந்து
rabbikum
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
washifāon
وَشِفَآءٌ
இன்னும் மருந்து
limā
لِّمَا
உள்ளவற்றிற்கு
fī l-ṣudūri
فِى ٱلصُّدُورِ
நெஞ்சங்களில்
wahudan
وَهُدًى
இன்னும் நேர்வழி
waraḥmatun
وَرَحْمَةٌ
இன்னும் அருள்
lil'mu'minīna
لِّلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்திருக்கிறது. உங்கள் உள்ளங்களிலுள்ள நோய்களை குணப்படுத்தக் கூடியதுமாகும். (அது) நம்பிக்கைக் கொண்டவர் களுக்கு நேர்வழி காட்டியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௫௭)
Tafseer
௫௮

قُلْ بِفَضْلِ اللّٰهِ وَبِرَحْمَتِهٖ فَبِذٰلِكَ فَلْيَفْرَحُوْاۗ هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ ٥٨

qul
قُلْ
கூறுவீராக
bifaḍli
بِفَضْلِ
அருளைக் கொண்டு
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
wabiraḥmatihi
وَبِرَحْمَتِهِۦ
இன்னும் அவனது கருணையைக் கொண்டு
fabidhālika
فَبِذَٰلِكَ
இதைக் கொண்டே
falyafraḥū
فَلْيَفْرَحُوا۟
அவர்கள் மகிழ்ச்சியடையட்டும்
huwa
هُوَ
இது
khayrun
خَيْرٌ
மிக மேலானது
mimmā
مِّمَّا
எவை/விட
yajmaʿūna
يَجْمَعُونَ
சேகரிக்கிறார்கள்
"(இதனை) அல்லாஹ்வின் அருளாகவும் அன்பாகவும் (பாவித்து) இதற்காக அவர்கள் சந்தோஷமடையட்டும். இது அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் (மற்ற பொருள்கள்) அனைத்தையும் விட மிக்க மேலானது" என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௫௮)
Tafseer
௫௯

قُلْ اَرَءَيْتُمْ مَّآ اَنْزَلَ اللّٰهُ لَكُمْ مِّنْ رِّزْقٍ فَجَعَلْتُمْ مِّنْهُ حَرَامًا وَّحَلٰلًا ۗ قُلْ اٰۤللّٰهُ اَذِنَ لَكُمْ اَمْ عَلَى اللّٰهِ تَفْتَرُوْنَ ٥٩

qul
قُلْ
கூறுவீராக
ara-aytum
أَرَءَيْتُم
அறிவிப்பீர்களாக
mā anzala
مَّآ أَنزَلَ
எதை/இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lakum
لَكُم
உங்களுக்காக
min riz'qin
مِّن رِّزْقٍ
உணவில்
fajaʿaltum
فَجَعَلْتُم
நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களா
min'hu
مِّنْهُ
அதில்
ḥarāman
حَرَامًا
ஆகாதவை
waḥalālan
وَحَلَٰلًا
இன்னும் ஆகுமானவை
qul
قُلْ
கூறுவீராக
āllahu
ءَآللَّهُ
அல்லாஹ்
adhina
أَذِنَ
அனுமதியளித்தான்
lakum
لَكُمْۖ
உங்களுக்கு
am
أَمْ
அல்லது
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
taftarūna
تَفْتَرُونَ
இட்டுக்கட்டுகிறீர்கள்
(அன்றி, நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "உங்களுக்காக அல்லாஹ் இறக்கிவைத்த உணவுகளை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஆகாதவையென்றும், சிலவற்றை ஆகுமானவை என்றும் (உங்கள் விருப்பப்படி) நீங்கள் ஆக்கிக் கொள்கிறீர்களே! (இவ்வாறு உங்கள் விருப்பப்படி செய்ய) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்திருக்கின்றானா? அல்லது அல்லாஹ்வின் மீது கற்பனையாக(ப் பொய்) கூறுகிறீர்களா?" (என்றும் நீங்கள் கேளுங்கள்.) ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௫௯)
Tafseer
௬௦

وَمَا ظَنُّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ يَوْمَ الْقِيٰمَةِ ۗاِنَّ اللّٰهَ لَذُوْ فَضْلٍ عَلَى النَّاسِ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا يَشْكُرُوْنَ ࣖ ٦٠

wamā ẓannu
وَمَا ظَنُّ
எண்ணம் என்ன?
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yaftarūna
يَفْتَرُونَ
இட்டுக்கட்டுகிறார்கள்
ʿalā
عَلَى
மீது
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
l-kadhiba
ٱلْكَذِبَ
பொய்யை
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِۗ
மறுமை நாள்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
ladhū faḍlin
لَذُو فَضْلٍ
அருளுடையவன்
ʿalā
عَلَى
மீது
l-nāsi
ٱلنَّاسِ
மனிதர்கள்
walākinna
وَلَٰكِنَّ
எனினும்
aktharahum
أَكْثَرَهُمْ
அதிகமானவர்(கள்) அவர்களில்
lā yashkurūna
لَا يَشْكُرُونَ
நன்றி செலுத்தமாட்டார்கள்
அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவர்கள், மறுமை நாளைப் பற்றி என்ன எண்ணுகின்றனர்? (அது பொய்யென எண்ணிக் கொண்டனரா?) நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கிருபையுடையவனாக இருக்கிறான். (அவ்வாறு இல்லையெனில் அவர்களை உடனுக்குடன் தண்டித்திருப்பான்.) இவ்வாறிருந்தும் அவர்களில் பலர் அவனுக்கு நன்றி செலுத்துவதில்லை. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௦)
Tafseer