Skip to content

ஸூரா ஸூரத்து யூனுஸ் - Page: 4

Yunus

(al-Yūnus)

௩௧

قُلْ مَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمَاۤءِ وَالْاَرْضِ اَمَّنْ يَّمْلِكُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَمَنْ يُّخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُّدَبِّرُ الْاَمْرَۗ فَسَيَقُوْلُوْنَ اللّٰهُ ۚفَقُلْ اَفَلَا تَتَّقُوْنَ ٣١

qul
قُلْ
கூறுவீராக
man
مَن
யார்
yarzuqukum
يَرْزُقُكُم
உணவளிக்கிறார்/உங்களுக்கு
mina l-samāi
مِّنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
amman
أَمَّن
அல்லது யார்
yamliku
يَمْلِكُ
உரிமை கொள்வார்
l-samʿa
ٱلسَّمْعَ
செவி
wal-abṣāra
وَٱلْأَبْصَٰرَ
இன்னும் பார்வைகள்
waman
وَمَن
இன்னும் யார்?
yukh'riju
يُخْرِجُ
வெளிப்படுத்துவார்
l-ḥaya
ٱلْحَىَّ
உயிருள்ளதை
mina l-mayiti
مِنَ ٱلْمَيِّتِ
இறந்ததிலிருந்து
wayukh'riju
وَيُخْرِجُ
இன்னும் வெளிப்படுத்துவார்
l-mayita
ٱلْمَيِّتَ
இறந்ததை
mina l-ḥayi
مِنَ ٱلْحَىِّ
உயிருள்ளதிலிருந்து
waman
وَمَن
இன்னும் யார்?
yudabbiru
يُدَبِّرُ
நிர்வகிக்கிறான்
l-amra
ٱلْأَمْرَۚ
காரியத்தை
fasayaqūlūna
فَسَيَقُولُونَ
கூறுவார்கள்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
faqul
فَقُلْ
கூறுவீராக
afalā tattaqūna
أَفَلَا تَتَّقُونَ
நீங்கள் அஞ்ச வேண்டாமா?
(நபியே!) நீங்கள் (அவர்களை நோக்கி) "வானத்திலிருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? (உங்களுடைய) செவிக்கும் பார்வைகளுக்கும் உரிமையாளன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (உலகின்) எல்லா காரியங்களையும் திட்டமிட்டு நிகழ்த்துபவன் யார்?" என்று கேளுங்கள்! அதற்கவர்கள் "அல்லாஹ்தான்" என்று கூறுவார்கள். அவ்வாறாயின் (அவனுக்கு) நீங்கள் பயப்பட வேண்டாமா?" என்று கேளுங்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௩௧)
Tafseer
௩௨

فَذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمُ الْحَقُّۚ فَمَاذَا بَعْدَ الْحَقِّ اِلَّا الضَّلٰلُ ۖفَاَنّٰى تُصْرَفُوْنَ ٣٢

fadhālikumu
فَذَٰلِكُمُ
அந்த
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
rabbukumu
رَبُّكُمُ
உங்கள் இறைவன்
l-ḥaqu
ٱلْحَقُّۖ
உண்மையானவன்
famādhā
فَمَاذَا
(வேறு) என்ன?
baʿda
بَعْدَ
பின்னர்
l-ḥaqi
ٱلْحَقِّ
உண்மைக்கு
illā
إِلَّا
தவிர
l-ḍalālu
ٱلضَّلَٰلُۖ
வழிகேடு
fa-annā
فَأَنَّىٰ
எவ்வாறு
tuṣ'rafūna
تُصْرَفُونَ
நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
"அத்தகைய தன்மையுள்ள அல்லாஹ்தான் உங்களது உண்மையான இறைவன். (இந்த) உண்மைக்குப் பின்னர் (நீங்கள் அவனுக்கு அடிபணியாது இருப்பது) வழிகேட்டைத் தவிர வேறில்லை. (இவ்வுண்மையை விட்டு) நீங்கள் எங்கு திருப்பப்படுகிறீர்கள்?" (என்றும் நபியே! நீங்கள் கேளுங்கள்). ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௩௨)
Tafseer
௩௩

كَذٰلِكَ حَقَّتْ كَلِمَتُ رَبِّكَ عَلَى الَّذِيْنَ فَسَقُوْٓا اَنَّهُمْ لَا يُؤْمِنُوْنَ ٣٣

kadhālika
كَذَٰلِكَ
அவ்வாறே
ḥaqqat
حَقَّتْ
உண்மையாகி விட்டது
kalimatu
كَلِمَتُ
சொல்
rabbika
رَبِّكَ
உம் இறைவனின்
ʿalā alladhīna
عَلَى ٱلَّذِينَ
மீது/எவர்கள்
fasaqū
فَسَقُوٓا۟
மீறினார்கள்
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
(அவர்கள் நம்பிக்கை கொள்ளாத) அவ்வாறே பாவத்தில்ஆழ்ந்து கிடக்கும் மற்றவர்களும், நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்ற உங்களது இறைவனின் வாக்கு உண்மையாகி விட்டது. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௩௩)
Tafseer
௩௪

قُلْ هَلْ مِنْ شُرَكَاۤىِٕكُمْ مَّنْ يَّبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗۗ قُلِ اللّٰهُ يَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ فَاَنّٰى تُؤْفَكُوْنَ ٣٤

qul
قُلْ
கூறுவீராக
hal min shurakāikum
هَلْ مِن شُرَكَآئِكُم
?/ இருந்து/இணைதெய்வங்கள்/உங்கள்
man
مَّن
எவன்
yabda-u
يَبْدَؤُا۟
ஆரம்பிக்கிறான்
l-khalqa
ٱلْخَلْقَ
படைப்புகளை
thumma
ثُمَّ
பிறகு
yuʿīduhu
يُعِيدُهُۥۚ
மீட்கிறான்/அவற்றை
quli
قُلِ
கூறுவீராக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
yabda-u
يَبْدَؤُا۟
ஆரம்பிக்கிறான்
l-khalqa
ٱلْخَلْقَ
படைப்புகளை
thumma
ثُمَّ
பிறகு
yuʿīduhu
يُعِيدُهُۥۖ
மீட்கிறான்/அவற்றை
fa-annā
فَأَنَّىٰ
எவ்வாறு?
tu'fakūna
تُؤْفَكُونَ
நீங்கள் திருப்பப்படுகிறீர்கள்
(அன்றி அவர்களை நோக்கி) "புதிதாக படைப்புகளை உண்டுபண்ணக் கூடியதும் (மரித்த பின்) அவைகளை உயிர்ப்பிக்கக் கூடியதும் நீங்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?" என்று (நபியே!) நீங்கள் கேளுங்கள். (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீங்களே அவர்களை நோக்கி) "படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறவனும் (அவை மரணித்த) பின்னர் அவற்றை உயிர்ப்பிக்கக்கூடியவனும் அல்லாஹ்தான்" (என்று கூறி "இந்த உண்மையை விட்டு) நீங்கள் எங்குச் செல்கின்றீர்கள்?" என்றும் கேளுங்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௩௪)
Tafseer
௩௫

قُلْ هَلْ مِنْ شُرَكَاۤىِٕكُمْ مَّنْ يَّهْدِيْٓ اِلَى الْحَقِّۗ قُلِ اللّٰهُ يَهْدِيْ لِلْحَقِّۗ اَفَمَنْ يَّهْدِيْٓ اِلَى الْحَقِّ اَحَقُّ اَنْ يُّتَّبَعَ اَمَّنْ لَّا يَهِدِّيْٓ اِلَّآ اَنْ يُّهْدٰىۚ فَمَا لَكُمْۗ كَيْفَ تَحْكُمُوْنَ ٣٥

qul
قُلْ
கூறுவீராக
hal min
هَلْ مِن
?/இருந்து
shurakāikum
شُرَكَآئِكُم
இணை(தெய்வங்)கள்/உங்கள்
man
مَّن
எவர்
yahdī
يَهْدِىٓ
நேர்வழி காட்டுவார்
ilā
إِلَى
பக்கம்
l-ḥaqi
ٱلْحَقِّۚ
சத்தியம்
quli
قُلِ
கூறுவீராக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yahdī
يَهْدِى
நேர்வழி காட்டுகிறான்
lil'ḥaqqi
لِلْحَقِّۗ
சத்தியத்திற்கு
afaman
أَفَمَن
ஆகவே எவர்?
yahdī
يَهْدِىٓ
நேர்வழி காட்டுவான்
ilā l-ḥaqi
إِلَى ٱلْحَقِّ
பக்கம்/சத்தியத்தின்
aḥaqqu
أَحَقُّ
மிகத் தகுதியானவனா
an yuttabaʿa
أَن يُتَّبَعَ
பின்பற்றப்படுவதற்கு
amman
أَمَّن
அல்லது/எவர்
lā yahiddī
لَّا يَهِدِّىٓ
நேர்வழி அடைய மாட்டான்
illā
إِلَّآ
தவிர
an yuh'dā
أَن يُهْدَىٰۖ
அவர் நேர்வழி காட்டப்படுவார்
famā
فَمَا
என்ன?
lakum
لَكُمْ
உங்களுக்கு
kayfa
كَيْفَ
எவ்வாறு?
taḥkumūna
تَحْكُمُونَ
நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்
(அன்றி) "சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியது நீங்கள் வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?" என்றும் கேளுங்கள். (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீங்களே அவர்களை நோக்கி) "அல்லாஹ்தான் சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியவன்" (என்று கூறி) "நேரான வழியில் செலுத்தக் கூடியவனைப் பின்பற்றுவது தகுமா? அல்லது பிறர் அதற்கு வழி காண்பிக்காமல் தானாகவே வழி செல்ல முடியாததைப் பின்பற்றுவது தகுமா? உங்களுக்கு என்ன (கேடு) நேர்ந்தது? (இதற்கு மாறாக) நீங்கள் எவ்வாறு முடிவு செய்யலாம்" என்றும் நீங்கள் கேளுங்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௩௫)
Tafseer
௩௬

وَمَا يَتَّبِعُ اَكْثَرُهُمْ اِلَّا ظَنًّاۗ اِنَّ الظَّنَّ لَا يُغْنِيْ مِنَ الْحَقِّ شَيْـًٔاۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ ۢبِمَا يَفْعَلُوْنَ ٣٦

wamā yattabiʿu
وَمَا يَتَّبِعُ
பின்பற்றவில்லை
aktharuhum
أَكْثَرُهُمْ
பெரும்பாலானவர்கள் அவர்களில்
illā
إِلَّا
தவிர
ẓannan
ظَنًّاۚ
சந்தேகத்தை
inna
إِنَّ
நிச்சயமாக
l-ẓana
ٱلظَّنَّ
சந்தேகம்
lā yugh'nī
لَا يُغْنِى
பலன் தராது
mina
مِنَ
விட்டு
l-ḥaqi
ٱلْحَقِّ
உண்மையை
shayan
شَيْـًٔاۚ
ஒரு சிறிது
inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bimā
بِمَا
எதை
yafʿalūna
يَفْعَلُونَ
அவர்கள் செய்கிறார்கள்
அவர்களில் பெரும்பாலானவர்கள் வீண் சந்தேகத்தையே அன்றி பின்பற்றுவது இல்லை. நிச்சயமாக வீண் சந்தேகம் உண்மையை அறிவதற்கு ஒரு சிறிதும் பயன்படாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௩௬)
Tafseer
௩௭

وَمَا كَانَ هٰذَا الْقُرْاٰنُ اَنْ يُّفْتَرٰى مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ تَصْدِيْقَ الَّذِيْ بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ الْكِتٰبِ لَا رَيْبَ فِيْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِيْنَۗ ٣٧

wamā kāna
وَمَا كَانَ
இல்லை
hādhā l-qur'ānu
هَٰذَا ٱلْقُرْءَانُ
இந்த குர்ஆன்
an yuf'tarā
أَن يُفْتَرَىٰ
இட்டுக்கட்டப்பட்டதாக
min dūni
مِن دُونِ
இருந்து/அல்லாதவர்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
walākin
وَلَٰكِن
எனினும்
taṣdīqa
تَصْدِيقَ
உண்மைப்படுத்துதல்
alladhī
ٱلَّذِى
எவற்றை
bayna yadayhi
بَيْنَ يَدَيْهِ
தனக்கு முன்னால்
watafṣīla
وَتَفْصِيلَ
இன்னும் விவரித்துக் கூறுதல்
l-kitābi
ٱلْكِتَٰبِ
சட்டங்களை
lā rayba
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
fīhi
فِيهِ
இதில்
min
مِن
இருந்து
rabbi
رَّبِّ
இறைவன்
l-ʿālamīna
ٱلْعَٰلَمِينَ
அகிலங்களின்
இந்தக் குர்ஆன் அல்லாஹ்வினால் (அருளப்பட்டதே) அன்றி (மற்ற எவராலும்) பொய்யாகக் கற்பனை செய்யப்பட்டதன்று. தவிர, இது இதற்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைத்து அவைகளில் உள்ளவற்றை விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது. ஆகவே, (இது) உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனிடமிருந்து வந்தது என்பதில் அறவே சந்தேகமில்லை. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௩௭)
Tafseer
௩௮

اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰىهُ ۗ قُلْ فَأْتُوْا بِسُوْرَةٍ مِّثْلِهٖ وَادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٣٨

am
أَمْ
அல்லது
yaqūlūna
يَقُولُونَ
அவர்கள் கூறுகின்றனர்
if'tarāhu
ٱفْتَرَىٰهُۖ
இதை இட்டுக்கட்டினார்
qul
قُلْ
கூறுவீராக
fatū
فَأْتُوا۟
வாருங்கள்
bisūratin
بِسُورَةٍ
ஒர் அத்தியாயத்தைக் கொண்டு
mith'lihi
مِّثْلِهِۦ
அது போன்ற
wa-id'ʿū
وَٱدْعُوا۟
இன்னும் அழையுங்கள்
mani
مَنِ
எவர்
is'taṭaʿtum
ٱسْتَطَعْتُم
சாத்தியமானீர்கள்
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மை சொல்பவர்களாக
இதனை (நம்முடைய தூதராகிய) "அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்" என அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின் நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வையன்றி உங்களுக்குச் சாத்தியமானவர்கள் அனைவரையும் (உங்களுக்குத் துணையாக) அழைத்துக்கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து,) இதிலுள்ளதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்." ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௩௮)
Tafseer
௩௯

بَلْ كَذَّبُوْا بِمَا لَمْ يُحِيْطُوْا بِعِلْمِهٖ وَلَمَّا يَأْتِهِمْ تَأْوِيْلُهٗۗ كَذٰلِكَ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِيْنَ ٣٩

bal
بَلْ
மாறாக
kadhabū
كَذَّبُوا۟
பொய்ப்பித்தனர்
bimā lam yuḥīṭū
بِمَا لَمْ يُحِيطُوا۟
எதை/அவர்கள் சூழ்ந்தறியவில்லை
biʿil'mihi
بِعِلْمِهِۦ
அதன் அறிவு
walammā yatihim
وَلَمَّا يَأْتِهِمْ
இன்னும் வரவில்லை/இவர்களுக்கு
tawīluhu
تَأْوِيلُهُۥۚ
அதன் விளக்கம்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறே
kadhaba
كَذَّبَ
பொய்ப்பித்தனர்
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْۖ
எவர்கள்/முன்னர்/இவர்களுக்கு
fa-unẓur
فَٱنظُرْ
ஆகவே கவனிப்பீராக
kayfa kāna
كَيْفَ كَانَ
எவ்வாறு இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களின்
அவர்கள் தங்கள் அறிவால் தெரிந்து கொள்ள முடியாததையும், (நிகழுமென) அதில் கூறப்பட்டவை நிகழாதிருக்கையில் அவற்றையும் (அதில் கூறப்பட்ட மற்றவைகளையும்) பொய்யென அவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (தங்கள் அறிவுக்கு எட்டாததையும், தாங்கள் காணாததையும்) பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தனர். ஆகவே, அந்த அநியாயக்காரர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனியுங்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௩௯)
Tafseer
௪௦

وَمِنْهُمْ مَّنْ يُّؤْمِنُ بِهٖ وَمِنْهُمْ مَّنْ لَّا يُؤْمِنُ بِهٖۗ وَرَبُّكَ اَعْلَمُ بِالْمُفْسِدِيْنَ ࣖ ٤٠

wamin'hum
وَمِنْهُم
அவர்களில்
man
مَّن
எவர்
yu'minu
يُؤْمِنُ
நம்பிக்கைகொண்டார்
bihi
بِهِۦ
அதை
wamin'hum
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
man
مَّن
எவர்
lā yu'minu
لَّا يُؤْمِنُ
நம்பிக்கை கொள்ளமாட்டார்
bihi
بِهِۦۚ
அதை
warabbuka
وَرَبُّكَ
உம் இறைவன்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bil-muf'sidīna
بِٱلْمُفْسِدِينَ
விஷமிகளை
(திருக்குர்ஆனில் கூறப்பட்டவை நிகழுமென) அதனை நம்பக்கூடியவரும் அவர்களில் உள்ளனர்; (நிகழ்ந்த பின்னரும்) அதனை நம்பாதவரும் அவர்களில் உள்ளனர். (அதனை நம்பாத) இந்த விஷமிகளை உங்கள் இறைவன் நன்கறிந்து கொள்வான். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௪௦)
Tafseer