Skip to content

ஸூரா ஸூரத்து யூனுஸ் - Page: 3

Yunus

(al-Yūnus)

௨௧

وَاِذَآ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّنْۢ بَعْدِ ضَرَّاۤءَ مَسَّتْهُمْ اِذَا لَهُمْ مَّكْرٌ فِيْٓ اٰيٰتِنَاۗ قُلِ اللّٰهُ اَسْرَعُ مَكْرًاۗ اِنَّ رُسُلَنَا يَكْتُبُوْنَ مَا تَمْكُرُوْنَ ٢١

wa-idhā adhaqnā
وَإِذَآ أَذَقْنَا
நாம் சுவைக்க வைத்தால்
l-nāsa
ٱلنَّاسَ
மனிதர்களுக்கு
raḥmatan
رَحْمَةً
ஒரு கருணையை
min baʿdi
مِّنۢ بَعْدِ
பின்னர்
ḍarrāa
ضَرَّآءَ
ஒரு துன்பம்
massathum
مَسَّتْهُمْ
தீண்டியது/தங்களை
idhā
إِذَا
அப்போது
lahum
لَهُم
அவர்களுக்கு
makrun
مَّكْرٌ
ஒரு சூழ்ச்சி
fī āyātinā
فِىٓ ءَايَاتِنَاۚ
வசனங்களில்/நம்
quli
قُلِ
கூறுவீராக
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
asraʿu
أَسْرَعُ
மிகத் தீவிரமானவன்
makran
مَكْرًاۚ
சூழ்ச்சி செய்வதில்
inna
إِنَّ
நிச்சயமாக
rusulanā
رُسُلَنَا
நம் தூதர்கள்
yaktubūna
يَكْتُبُونَ
பதிவு செய்கிறார்கள்
مَا
எதை
tamkurūna
تَمْكُرُونَ
நீங்கள் சூழ்ச்சி செய்கிறீர்கள்
(இம்)மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களைப் போக்கி (பின்னர் நம்) அருளைக் கொண்டு அவர்கள் இன்பமடையும்படி நாம் செய்தால் (அதற்கு அவர்கள் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக) உடனே அவர்கள் நம் வசனங்களில் (தவறான அர்த்தம் கற்பிக்க) சூழ்ச்சி செய்கின்றனர். அதற்கு (நபியே! அவர்களை நோக்கி "உங்கள் சூழ்ச்சியைவிட) அல்லாஹ்வின் சூழ்ச்சி முந்திக் கொள்ளும்!" என்று கூறுங்கள். நிச்சயமாக நம்முடைய தூதர்(களாகிய மலக்கு)கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௨௧)
Tafseer
௨௨

هُوَ الَّذِيْ يُسَيِّرُكُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِۗ حَتّٰٓى اِذَا كُنْتُمْ فِىْ الْفُلْكِۚ وَجَرَيْنَ بِهِمْ بِرِيْحٍ طَيِّبَةٍ وَّفَرِحُوْا بِهَا جَاۤءَتْهَا رِيْحٌ عَاصِفٌ وَّجَاۤءَهُمُ الْمَوْجُ مِنْ كُلِّ مَكَانٍ وَّظَنُّوْٓا اَنَّهُمْ اُحِيْطَ بِهِمْۙ دَعَوُا اللّٰهَ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ ەۚ لَىِٕنْ اَنْجَيْتَنَا مِنْ هٰذِهٖ لَنَكُوْنَنَّ مِنَ الشّٰكِرِيْنَ ٢٢

huwa alladhī
هُوَ ٱلَّذِى
அவன்/எத்தகையவன்
yusayyirukum
يُسَيِّرُكُمْ
பயணிக்கவைக்கிறான் உங்களை
fī l-bari
فِى ٱلْبَرِّ
நிலத்திலும்
wal-baḥri
وَٱلْبَحْرِۖ
இன்னும் நீரிலும்
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā
إِذَا
போது
kuntum
كُنتُمْ
இருக்கின்றீர்கள்
fī l-ful'ki
فِى ٱلْفُلْكِ
கப்பல்களில்
wajarayna
وَجَرَيْنَ
இன்னும் பயணித்தன
bihim
بِهِم
அவர்களை சுமந்து
birīḥin
بِرِيحٍ
ஒரு காற்றால்
ṭayyibatin
طَيِّبَةٍ
நல்ல
wafariḥū
وَفَرِحُوا۟
இன்னும் அவர்கள் மகிழ்ந்தனர்
bihā
بِهَا
அதன்மூலம்
jāathā
جَآءَتْهَا
வந்தது/அவற்றுக்கு
rīḥun
رِيحٌ
காற்று
ʿāṣifun
عَاصِفٌ
புயல்
wajāahumu
وَجَآءَهُمُ
இன்னும் வந்தன அவர்களுக்கு
l-mawju
ٱلْمَوْجُ
அலைகள்
min
مِن
இருந்து
kulli
كُلِّ
எல்லா
makānin
مَكَانٍ
இடம்
waẓannū
وَظَنُّوٓا۟
இன்னும் அவர்கள் எண்ணினர்
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக தாம்
uḥīṭa
أُحِيطَ
அழிக்கப்பட்டோம்
bihim
بِهِمْۙ
தாம்
daʿawū
دَعَوُا۟
அவர்கள் அழைக்கின்றனர்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
mukh'liṣīna
مُخْلِصِينَ
தூய்மைப்படுத்தியவர்களாக
lahu
لَهُ
அவனுக்கு
l-dīna
ٱلدِّينَ
வழிபாட்டை
la-in anjaytanā
لَئِنْ أَنجَيْتَنَا
நீ பாதுகாத்தால்/எங்களை
min hādhihi
مِنْ هَٰذِهِۦ
இதிலிருந்து
lanakūnanna
لَنَكُونَنَّ
நிச்சயமாக இருப்போம்
mina l-shākirīna
مِنَ ٱلشَّٰكِرِينَ
நன்றி செலுத்துபவர்களில்
நீரிலும் நிலத்திலும் அவனே உங்களை அழைத்துச் செல்கிறான். நீங்கள் கப்பலில் ஏறிய பின்னர் கப்பலில் உள்ளவர்களை நல்ல காற்று நடத்திச் செல்வதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருக்கும் சமயத்தில், புயல் காற்று அடிக்க ஆரம்பித்து நாலா பக்கங்களில் இருந்தும் அவர்களை அலைகள் வந்து மோதி "நிச்சயமாக நாம் (அலைகளால்) சூழ்ந்து கொள்ளப்பட்டோம்; (இதிலிருந்து தப்ப நமக்கு யாதொரு வழியுமில்லை)" என்று அவர்கள் எண்ணும் சமயத்தில் (நம்மை நோக்கி "எங்கள் இறைவனே!) இதிலிருந்து நீ எங்களை பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் உனக்கு என்றென்றும் நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்" என்று கலப்பற்ற மனதினராக அல்லாஹ்வை வழிபட்டு (மிக்கத் தாழ்மையுடன் அழுது கூக்குரலிட்டுப்) பிரார்த்திக்கிறார்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௨௨)
Tafseer
௨௩

فَلَمَّآ اَنْجٰىهُمْ اِذَا هُمْ يَبْغُوْنَ فِى الْاَرْضِ بِغَيْرِ الْحَقِّ ۗيٰٓاَيُّهَا النَّاسُ اِنَّمَا بَغْيُكُمْ عَلٰٓى اَنْفُسِكُمْ مَّتَاعَ الْحَيٰوةِ الدُّنْيَاۖ ثُمَّ اِلَيْنَا مَرْجِعُكُمْ فَنُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٢٣

falammā
فَلَمَّآ
போது
anjāhum
أَنجَىٰهُمْ
அவன் பாதுகாத்தான்/அவர்களை
idhā
إِذَا
அப்போதே
hum
هُمْ
அவர்கள்
yabghūna
يَبْغُونَ
வரம்பு மீறுகின்றனர்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
bighayri l-ḥaqi
بِغَيْرِ ٱلْحَقِّۗ
நியாயமின்றி
yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மனிதர்களே
innamā
إِنَّمَا
எல்லாம்
baghyukum
بَغْيُكُمْ
வரம்புமீறுதல்/உங்கள்
ʿalā anfusikum
عَلَىٰٓ أَنفُسِكُمۖ
உங்களுக்கே கேடானது
matāʿa
مَّتَٰعَ
சொற்ப இன்பமாகும்
l-ḥayati
ٱلْحَيَوٰةِ
வாழ்க்கை
l-dun'yā
ٱلدُّنْيَاۖ
இவ்வுலக
thumma
ثُمَّ
பிறகு
ilaynā
إِلَيْنَا
நம் பக்கமே
marjiʿukum
مَرْجِعُكُمْ
உங்கள் மீளுமிடம்
fanunabbi-ukum
فَنُنَبِّئُكُم
அறிவிப்போம்/உங்களுக்கு
bimā
بِمَا
எவற்றை
kuntum
كُنتُمْ
இருந்தீர்கள்
taʿmalūna
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
அவன் அவர்களை பாதுகாத்துக் கொண்டாலோ அவர்கள் (கரை சேர்ந்த) அச்சமயமே நியாயமின்றி பூமியில் அடாது செய்யத் தலைப்படுகின்றனர். மனிதர்களே! உங்களுடைய அடாத செயல்கள் உங்களுக்கே கேடாக முடியும். (அதனால்) இவ்வுலக வாழ்க்கையில் சிறிது சுகம் அனுபவிக்கலாம். பின்னரோ நம்மிடம் நீங்கள் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை எவை என்பதை அச்சமயம் நாம் உங்களுக்கு அறிவித்து விடுவோம். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௨௩)
Tafseer
௨௪

اِنَّمَا مَثَلُ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَاۤءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَاۤءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ مِمَّا يَأْكُلُ النَّاسُ وَالْاَنْعَامُ ۗحَتّٰٓى اِذَآ اَخَذَتِ الْاَرْضُ زُخْرُفَهَا وَازَّيَّنَتْ وَظَنَّ اَهْلُهَآ اَنَّهُمْ قٰدِرُوْنَ عَلَيْهَآ اَتٰىهَآ اَمْرُنَا لَيْلًا اَوْ نَهَارًا فَجَعَلْنٰهَا حَصِيْدًا كَاَنْ لَّمْ تَغْنَ بِالْاَمْسِۗ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ ٢٤

innamā
إِنَّمَا
எல்லாம்
mathalu
مَثَلُ
உதாரணம்
l-ḥayati
ٱلْحَيَوٰةِ
வாழ்க்கையின்
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகம்
kamāin
كَمَآءٍ
நீரைப் போன்று
anzalnāhu
أَنزَلْنَٰهُ
நாம் இறக்கிய
mina
مِنَ
இருந்து
l-samāi
ٱلسَّمَآءِ
மேகம்
fa-ikh'talaṭa
فَٱخْتَلَطَ
கலந்து விட்டது
bihi
بِهِۦ
அதன் மூலம்
nabātu
نَبَاتُ
தாவரம்
l-arḍi
ٱلْأَرْضِ
பூமியின்
mimmā
مِمَّا
எதிலிருந்து
yakulu
يَأْكُلُ
புசிப்பார்(கள்)
l-nāsu
ٱلنَّاسُ
மனிதர்கள்
wal-anʿāmu
وَٱلْأَنْعَٰمُ
இன்னும் கால்நடைகளும்
ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā
إِذَآ
போது
akhadhati
أَخَذَتِ
எடுத்தது
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி
zukh'rufahā
زُخْرُفَهَا
தன் அலங்காரத்தை
wa-izzayyanat
وَٱزَّيَّنَتْ
இன்னும் அலங்காரமானது
waẓanna
وَظَنَّ
இன்னும் எண்ணினார்(கள்)
ahluhā
أَهْلُهَآ
அதன் உரிமையாளர்கள்
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
qādirūna
قَٰدِرُونَ
ஆற்றல் பெற்றவர்கள்
ʿalayhā
عَلَيْهَآ
அவற்றின் மேல்
atāhā
أَتَىٰهَآ
வந்தது அவற்றுக்கு
amrunā
أَمْرُنَا
நம் கட்டளை
laylan
لَيْلًا
இரவில்
aw
أَوْ
அல்லது
nahāran
نَهَارًا
பகலில்
fajaʿalnāhā
فَجَعَلْنَٰهَا
ஆக்கினோம்/அவற்றை
ḥaṣīdan
حَصِيدًا
வேரறுக்கப்பட்டதாக
ka-an
كَأَن
போன்று
lam taghna
لَّمْ تَغْنَ
அவைஇருக்கவில்லை
bil-amsi
بِٱلْأَمْسِۚ
நேற்று
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறு
nufaṣṣilu
نُفَصِّلُ
விவரிக்கிறோம்
l-āyāti
ٱلْءَايَٰتِ
வசனங்களை
liqawmin
لِقَوْمٍ
மக்களுக்கு
yatafakkarūna
يَتَفَكَّرُونَ
சிந்திக்கின்றார்கள்
இவ்வுலக வாழ்க்கையின் உதாரணம்: மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் நீரை ஒத்திருக்கிறது. அது கால்நடைகளும் மனிதர்களும் புசிக்கக்கூடிய புற்பூண்டு ஆகியவைகளுடன் கலந்து (அடர்ந்த பயிராக வளர்ந்து, பூத்துக் காய்த்துக் கதிர் வாங்கி) பூமியை அலங்காரப்படுத்திக் கொண்டிருக்கும் தறுவாயில், அதன் சொந்தக்காரர்கள் (நாம் செய்த வேளாண்மை அறுவடைக்கு வந்து விட்டது; நாளைக்கு) அதனை நிச்சயமாக நாம் அறுவடை செய்துவிடுவோம் என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அச்சமயம், இரவிலோ பகலிலோ நம்முடைய கட்டளை(யினால் ஒரு ஆபத்து) வந்து அதனால் அவை நேற்றைய தினம் அவ்விடத்தில் இருக்கவே யில்லையென்று எண்ணக் கூடியவாறு அவைகளை நாம் அழித்து விட்டோம். (இந்த உதாரணத்தைச்) சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு நாம் நம்முடைய வசனங்களை இவ்வாறு தெளிவாக விவரிக்கிறோம். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௨௪)
Tafseer
௨௫

وَاللّٰهُ يَدْعُوْٓ اِلٰى دَارِ السَّلٰمِ ۚوَيَهْدِيْ مَنْ يَّشَاۤءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ٢٥

wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yadʿū
يَدْعُوٓا۟
அழைக்கிறான்
ilā dāri
إِلَىٰ دَارِ
இல்லத்திற்கு
l-salāmi
ٱلسَّلَٰمِ
ஈடேற்றத்தின்
wayahdī
وَيَهْدِى
இன்னும் வழிகாட்டுகிறான்
man yashāu
مَن يَشَآءُ
எவரை/நாடுகிறான்
ilā ṣirāṭin
إِلَىٰ صِرَٰطٍ
பக்கம்/பாதை
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
நேரானது
(மனிதர்களே!) ஈடேற்றம் அளிக்கக்கூடிய வீட்டிற்கே அல்லாஹ் (உங்களை) அழைக்கிறான். (அவனுக்கு வழிப்பட்டு நடக்கும்) அவன் விரும்புகின்றவர்களை அதற்குரிய நேரான வழியிலும் செலுத்துகிறான். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௨௫)
Tafseer
௨௬

۞ لِلَّذِيْنَ اَحْسَنُوا الْحُسْنٰى وَزِيَادَةٌ ۗوَلَا يَرْهَقُ وُجُوْهَهُمْ قَتَرٌ وَّلَا ذِلَّةٌ ۗاُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ٢٦

lilladhīna
لِّلَّذِينَ
எவர்களுக்கு
aḥsanū
أَحْسَنُوا۟
நல்லறம் புரிந்தனர்
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰ
மிக அழகிய கூலி
waziyādatun
وَزِيَادَةٌۖ
இன்னும் அதிகம்
walā yarhaqu
وَلَا يَرْهَقُ
இன்னும் சூழாது
wujūhahum
وُجُوهَهُمْ
அவர்களுடைய முகங்கள்
qatarun
قَتَرٌ
கவலை
walā dhillatun
وَلَا ذِلَّةٌۚ
அவர்கள் இழிவு
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
aṣḥābu l-janati
أَصْحَٰبُ ٱلْجَنَّةِۖ
சொர்க்கவாசிகள்
hum fīhā
هُمْ فِيهَا
அவர்கள்/அதில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்
நன்மை செய்தவர்களுக்கு(க் கூலி) நன்மைதான். (அவர்கள் செய்ததை விட) அதிகமாகவும் கிடைக்கும். (அதனால் அவர்கள் மிக்க ஆனந்தம் அடைந்தவர்களாக இருப்பார்கள்.) அவர்கள் முகங்களை கவலையோ அல்லது இழிவோ சூழ்ந்துகொள்ளாது. நிச்சயமாக அவர்கள் சுவனவாசிகளே. அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௨௬)
Tafseer
௨௭

وَالَّذِيْنَ كَسَبُوا السَّيِّاٰتِ جَزَاۤءُ سَيِّئَةٍ ۢبِمِثْلِهَاۙ وَتَرْهَقُهُمْ ذِلَّةٌ ۗمَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍۚ كَاَنَّمَآ اُغْشِيَتْ وُجُوْهُهُمْ قِطَعًا مِّنَ الَّيْلِ مُظْلِمًاۗ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚهُمْ فِيْهَا خٰلِدُوْنَ ٢٧

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
kasabū
كَسَبُوا۟
செய்தனர்
l-sayiāti
ٱلسَّيِّـَٔاتِ
தீமைகளை
jazāu sayyi-atin
جَزَآءُ سَيِّئَةٍۭ
கூலி/தீமையின்
bimith'lihā
بِمِثْلِهَا
அது போன்றதைக் கொண்டு
watarhaquhum
وَتَرْهَقُهُمْ
இன்னும் சூழும்/அவர்களை
dhillatun
ذِلَّةٌۖ
இழிவு
مَّا
இல்லை
lahum
لَهُم
அவர்களுக்கு
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்விடமிருந்து
min ʿāṣimin
مِنْ عَاصِمٍۖ
பாதுகாப்பவர் ஒருவரும்
ka-annamā
كَأَنَّمَآ
போன்று
ugh'shiyat
أُغْشِيَتْ
சூழப்பட்டன
wujūhuhum
وُجُوهُهُمْ
அவர்களுடைய முகங்கள்
qiṭaʿan
قِطَعًا
ஒரு பாகத்தால்
mina al-layli
مِّنَ ٱلَّيْلِ
இரவின்
muẓ'liman
مُظْلِمًاۚ
இருண்டது
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்
hum
هُمْ
அவர்கள்
fīhā
فِيهَا
அதில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்
தீமைகளை எவர்கள் செய்தபோதிலும் தீமைக்குரிய கூலி அதைப்போன்ற தீமையே! அவர்களை நிந்தனையும் வந்தடையும். அல்லாஹ்வி(ன் வேதனையி)லிருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்பவர்கள் ஒருவருமில்லை. இருண்ட இரவின் ஒரு பாகம் வந்து சூழ்ந்து கொண்டதைப்போல் அவர்களுடைய முகங்கள் (கருப்பாகக்) காணப்படும். அவர்கள் நரகவாசிகள்தாம். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௨௭)
Tafseer
௨௮

وَيَوْمَ نَحْشُرُهُمْ جَمِيْعًا ثُمَّ نَقُوْلُ لِلَّذِيْنَ اَشْرَكُوْا مَكَانَكُمْ اَنْتُمْ وَشُرَكَاۤؤُكُمْۚ فَزَيَّلْنَا بَيْنَهُمْ وَقَالَ شُرَكَاۤؤُهُمْ مَّا كُنْتُمْ اِيَّانَا تَعْبُدُوْنَ ٢٨

wayawma
وَيَوْمَ
நாளில்
naḥshuruhum
نَحْشُرُهُمْ
ஒன்று சேர்ப்போம் அவர்கள்
jamīʿan
جَمِيعًا
அனைவரையும்
thumma
ثُمَّ
பிறகு
naqūlu
نَقُولُ
கூறுவோம்
lilladhīna
لِلَّذِينَ
எவர்களுக்கு
ashrakū
أَشْرَكُوا۟
இணைவைத்தனர்
makānakum
مَكَانَكُمْ
உங்கள் இடத்தில்
antum
أَنتُمْ
நீங்களும்
washurakāukum
وَشُرَكَآؤُكُمْۚ
இன்னும் இணைகள் உங்கள்
fazayyalnā
فَزَيَّلْنَا
நீக்கி விடுவோம்
baynahum
بَيْنَهُمْۖ
அவர்களுக்கிடையில்
waqāla
وَقَالَ
இன்னும் கூறுவார்
shurakāuhum
شُرَكَآؤُهُم
இணை(தெய்வங்)கள் அவர்களுடைய
mā kuntum
مَّا كُنتُمْ
நீங்கள் இருக்கவில்லை
iyyānā
إِيَّانَا
எங்களை
taʿbudūna
تَعْبُدُونَ
வணங்குகிறீர்கள்
(விசாரணைக்காக) அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களில் இணை வைத்து வணங்கியவர்களை நோக்கி "நீங்களும் நீங்கள் இணைவைத்து வணங்கிய தெய்வங்களும் சிறிது இங்கு தாமதியுங்கள்" என்று கூறி அவர்களுக்கிடையில் இருந்த தொடர்பை நீக்கி விடுவோம். அச்சமயம் அவர்களுடைய தெய்வங்கள் (என்று கற்பனையாக வணங்கி வந்த அவைகள்) அவர்களை நோக்கி "நீங்கள் எங்களை வணங்கவே இல்லை" என்றும், ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௨௮)
Tafseer
௨௯

فَكَفٰى بِاللّٰهِ شَهِيْدًاۢ بَيْنَنَا وَبَيْنَكُمْ اِنْ كُنَّا عَنْ عِبَادَتِكُمْ لَغٰفِلِيْنَ ٢٩

fakafā
فَكَفَىٰ
போதுமானவன்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வே
shahīdan
شَهِيدًۢا
சாட்சியால்
baynanā
بَيْنَنَا
எங்களுக்கிடையில்
wabaynakum
وَبَيْنَكُمْ
இன்னும் உங்களுக்கிடையில்
in kunnā
إِن كُنَّا
நிச்சயம் நாங்கள்
ʿan ʿibādatikum
عَنْ عِبَادَتِكُمْ
விட்டு/வழிபாடு/உங்கள்
laghāfilīna
لَغَٰفِلِينَ
கவனமற்றவர்களாகவே
(இதற்கு) "நமக்கும் உங்களுக்குமிடையில் அல்லாஹ்வே சாட்சியாக இருக்கின்றான்; நீங்கள் (எங்களை) வணங்கியதை நாங்கள் அறியவும் மாட்டோம்" என்றும் கூறும். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௨௯)
Tafseer
௩௦

هُنَالِكَ تَبْلُوْا كُلُّ نَفْسٍ مَّآ اَسْلَفَتْ وَرُدُّوْٓا اِلَى اللّٰهِ مَوْلٰىهُمُ الْحَقِّ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ ࣖ ٣٠

hunālika
هُنَالِكَ
அங்கு
tablū
تَبْلُوا۟
சோதிக்கும்
kullu
كُلُّ
ஒவ்வொரு
nafsin
نَفْسٍ
ஆத்மா
مَّآ
எவற்றை
aslafat
أَسْلَفَتْۚ
அது முன்செய்தது
waruddū
وَرُدُّوٓا۟
இன்னும் அவர்கள் கொண்டு வரப்படுவார்கள்
ilā l-lahi
إِلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் பக்கம்
mawlāhumu
مَوْلَىٰهُمُ
தங்கள் எஜமானன்
l-ḥaqi
ٱلْحَقِّۖ
உண்மையானவன்
waḍalla
وَضَلَّ
இன்னும் மறைந்துவிடும்
ʿanhum
عَنْهُم
அவர்களை விட்டு
مَّا
எது
kānū
كَانُوا۟
இருந்தனர்
yaftarūna
يَفْتَرُونَ
இட்டுக்கட்டுகின்றனர்
அங்கு ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த செயலைச் சோதித்து (அது நன்மையா? தீமையா? என்பதை) அறிந்து கொள்ளும். பின்னர், அவர்கள் தங்களுடைய உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கமே கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டிருந்த தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்துவிடும். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௩௦)
Tafseer