قُلِ انْظُرُوْا مَاذَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۗوَمَا تُغْنِى الْاٰيٰتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ ١٠١
- quli
- قُلِ
- கூறுவீராக
- unẓurū
- ٱنظُرُوا۟
- கவனியுங்கள்
- mādhā
- مَاذَا
- எதை
- fī l-samāwāti
- فِى ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களில்
- wal-arḍi
- وَٱلْأَرْضِۚ
- இன்னும் பூமியில்
- wamā tugh'nī
- وَمَا تُغْنِى
- பலனளிக்கமாட்டார்கள்
- l-āyātu
- ٱلْءَايَٰتُ
- வசனங்கள்
- wal-nudhuru
- وَٱلنُّذُرُ
- இன்னும் எச்சரிப்பவர்கள்
- ʿan qawmin
- عَن قَوْمٍ
- சமுதாயத்திற்கு
- lā yu'minūna
- لَّا يُؤْمِنُونَ
- நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
(நபியே! அவர்களை நோக்கி) "வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளை (சிறிது) கவனித்துப் பாருங்கள்" எனக் கூறுங்கள். எனினும், நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு நம்முடைய வசனங்களும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் யாதொரு பயனுமளிக்காது. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௧)Tafseer
فَهَلْ يَنْتَظِرُوْنَ اِلَّا مِثْلَ اَيَّامِ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِهِمْۗ قُلْ فَانْتَظِرُوْٓا اِنِّيْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِيْنَ ١٠٢
- fahal
- فَهَلْ
- ஆகவே
- yantaẓirūna
- يَنتَظِرُونَ
- எதிர் பார்க்கின்றனர்
- illā
- إِلَّا
- தவிர
- mith'la
- مِثْلَ
- போன்றதை
- ayyāmi
- أَيَّامِ
- நாள்கள்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- khalaw
- خَلَوْا۟
- சென்றார்கள்
- min qablihim
- مِن قَبْلِهِمْۚ
- தங்களுக்கு முன்
- qul
- قُلْ
- கூறுவீராக
- fa-intaẓirū
- فَٱنتَظِرُوٓا۟
- நீங்கள் எதிர் பாருங்கள்
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- maʿakum
- مَعَكُم
- உங்களுடன்
- mina l-muntaẓirīna
- مِّنَ ٱلْمُنتَظِرِينَ
- எதிர்பார்ப்பவர்களில்
(நபியே!) அவர்கள் தங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தைப் போன்றதேயன்றி (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? (எனவே, அவர்களை நோக்கி "அத்தகைய கஷ்டகாலம்தான் உங்களுக்கும் வர இருக்கிறது.) ஆகவே, (அதனை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் (அது உங்களுக்கு வருவதை) உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்" என்று கூறுங்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௨)Tafseer
ثُمَّ نُنَجِّيْ رُسُلَنَا وَالَّذِيْنَ اٰمَنُوْا كَذٰلِكَ ۚحَقًّا عَلَيْنَا نُنْجِ الْمُؤْمِنِيْنَ ࣖ ١٠٣
- thumma
- ثُمَّ
- பிறகு
- nunajjī
- نُنَجِّى
- பாதுகாப்போம்
- rusulanā
- رُسُلَنَا
- தூதர்களை/நம்
- wa-alladhīna
- وَٱلَّذِينَ
- இன்னும் எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟ۚ
- நம்பிக்கை கொண்டார்கள்
- kadhālika
- كَذَٰلِكَ
- இவ்வாறே
- ḥaqqan
- حَقًّا
- கடமையாக
- ʿalaynā
- عَلَيْنَا
- நம்மீது கடமையாக உள்ளது
- nunji
- نُنجِ
- நாம் பாதுகாப்பது
- l-mu'minīna
- ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கை கொண்டவர்களை
(அவ்வாறு வேதனை வரும் காலத்தில்) நம்முடைய தூதர்களை பாதுகாத்துக் கொள்வோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வோம். (ஏனென்றால்,) நம்பிக்கை கொண்டவர்களை பாதுகாத்துக் கொள்வது நம்மீது கடமையாகவே இருக்கிறது. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௩)Tafseer
قُلْ يٰٓاَيُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِيْ شَكٍّ مِّنْ دِيْنِيْ فَلَآ اَعْبُدُ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ اَعْبُدُ اللّٰهَ الَّذِيْ يَتَوَفّٰىكُمْ ۖ وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ ١٠٤
- qul
- قُلْ
- கூறுவீராக
- yāayyuhā l-nāsu
- يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
- மக்களே
- in kuntum
- إِن كُنتُمْ
- நீங்கள் இருந்தால்
- fī shakkin
- فِى شَكٍّ
- சந்தேகத்தில்
- min dīnī
- مِّن دِينِى
- என் மார்க்கத்தில்
- falā aʿbudu
- فَلَآ أَعْبُدُ
- நான் வணங்கமாட்டேன்
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்களை
- taʿbudūna
- تَعْبُدُونَ
- நீங்கள் வணங்குகிறீர்கள்
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வையன்றி
- walākin
- وَلَٰكِنْ
- எனினும்
- aʿbudu
- أَعْبُدُ
- வணங்குவேன்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வைத்தான்
- alladhī
- ٱلَّذِى
- எத்தகையவன்
- yatawaffākum
- يَتَوَفَّىٰكُمْۖ
- உயிர் கைப்பற்றுகிறான்/உங்களை
- wa-umir'tu
- وَأُمِرْتُ
- இன்னும் கட்டளையிடப் பட்டேன்
- an akūna
- أَنْ أَكُونَ
- நான் ஆகவேண்டுமென்று
- mina l-mu'minīna
- مِنَ ٱلْمُؤْمِنِينَ
- நம்பிக்கையாளர்களில்
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! நீங்கள் என்னுடைய மார்க்கத்தில் சந்தேகம் கொண்டபோதிலும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கு பவைகளை நான் எக்காலத்திலும் வணங்கப்போவதில்லை. எனினும், உங்கள் அனைவருடைய உயிரையும் கைப்பற்றும் (சக்தி பெற்ற) அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கையாளர்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டுமென்றே கட்டளையிடப் பட்டுள்ளேன். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௪)Tafseer
وَاَنْ اَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًاۚ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ ١٠٥
- wa-an aqim
- وَأَنْ أَقِمْ
- இன்னும் நிலைநிறுத்துவீராக
- wajhaka
- وَجْهَكَ
- உம் முகத்தை
- lilddīni
- لِلدِّينِ
- மார்க்கத்தின் மீது
- ḥanīfan
- حَنِيفًا
- உறுதியானவராக
- walā takūnanna
- وَلَا تَكُونَنَّ
- நிச்சயம் ஆகிவிடாதீர்
- mina l-mush'rikīna
- مِنَ ٱلْمُشْرِكِينَ
- இணைவைப்பவர்களில்
(நபியே!) நேரான மார்க்கத்தின் பக்கமே உங்களுடைய முகத்தை தொடர்ந்து திருப்பி வைப்பீராக! இணைவைத்து வணங்கு பவர்களில் நீங்களும் ஒருவராகிவிட வேண்டாம். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௫)Tafseer
وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكَ وَلَا يَضُرُّكَ ۚفَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِيْنَ ١٠٦
- walā tadʿu
- وَلَا تَدْعُ
- அழைக்காதீர்
- min dūni l-lahi
- مِن دُونِ ٱللَّهِ
- அல்லாஹ்வையன்றி
- mā lā yanfaʿuka
- مَا لَا يَنفَعُكَ
- எவை/பலனளிக்காது/ உமக்கு
- walā yaḍurruka
- وَلَا يَضُرُّكَۖ
- இன்னும் தீங்களிக்காது/ உமக்கு
- fa-in faʿalta
- فَإِن فَعَلْتَ
- நீ செய்தால்
- fa-innaka
- فَإِنَّكَ
- நிச்சயமாக நீர்
- idhan
- إِذًا
- அப்போது
- mina l-ẓālimīna
- مِّنَ ٱلظَّٰلِمِينَ
- அநியாயக்காரர்களில்
ஆகவே, உங்களுக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அநியாயக்காரர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௬)Tafseer
وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗ ٓاِلَّا هُوَ ۚوَاِنْ يُّرِدْكَ بِخَيْرٍ فَلَا رَاۤدَّ لِفَضْلِهٖۗ يُصِيْبُ بِهٖ مَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖ ۗوَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ ١٠٧
- wa-in yamsaska
- وَإِن يَمْسَسْكَ
- கொடுத்தால்/உமக்கு
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- biḍurrin
- بِضُرٍّ
- ஒரு தீங்கைக் கொண்டு
- falā
- فَلَا
- அறவே இல்லை
- kāshifa
- كَاشِفَ
- நீக்குபவர்
- lahu
- لَهُۥٓ
- அதை
- illā huwa
- إِلَّا هُوَۖ
- தவிர/அவன்
- wa-in yurid'ka
- وَإِن يُرِدْكَ
- நாடினால்/உமக்கு
- bikhayrin
- بِخَيْرٍ
- ஒரு நன்மையை
- falā
- فَلَا
- அறவே இல்லை
- rādda
- رَآدَّ
- தடுப்பவர்
- lifaḍlihi
- لِفَضْلِهِۦۚ
- அவனுடையஅருளை
- yuṣību bihi
- يُصِيبُ بِهِۦ
- அதை அடையச் செய்கிறான்
- man yashāu
- مَن يَشَآءُ
- எவர்/நாடுகின்றான்
- min ʿibādihi
- مِنْ عِبَادِهِۦۚ
- தன் அடியார்களில்
- wahuwa
- وَهُوَ
- அவன்தான்
- l-ghafūru
- ٱلْغَفُورُ
- மகா மன்னிப்பாளன்
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- பெரும் கருணையாளன்
அல்லாஹ் உங்களுக்கு யாதொரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதனை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உங்களுக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனுடைய அக்கருணையைத் தடை செய்ய எவராலும் முடியாது. அவன் அடியார்களில் அவன் விரும்பியவர்களுக்கே அதனை அளிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடைய வனாகவும் இருக்கிறான். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௭)Tafseer
قُلْ يٰٓاَيُّهَا النَّاسُ قَدْ جَاۤءَكُمُ الْحَقُّ مِنْ رَّبِّكُمْ ۚفَمَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِيْ لِنَفْسِهٖ ۚوَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚوَمَآ اَنَا۠ عَلَيْكُمْ بِوَكِيْلٍۗ ١٠٨
- qul
- قُلْ
- கூறுவீராக
- yāayyuhā l-nāsu
- يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
- மக்களே
- qad
- قَدْ
- வந்து விட்டது
- jāakumu
- جَآءَكُمُ
- உங்களுக்கு
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- உண்மை
- min
- مِن
- இருந்து
- rabbikum
- رَّبِّكُمْۖ
- உங்கள் இறைவன்
- famani
- فَمَنِ
- எவர்
- ih'tadā
- ٱهْتَدَىٰ
- நேர்வழி சென்றார்
- fa-innamā yahtadī
- فَإِنَّمَا يَهْتَدِى
- அவர் நேர்வழி செல்வதெல்லாம்
- linafsihi
- لِنَفْسِهِۦۖ
- தன் நன்மைக்காகவே
- waman
- وَمَن
- இன்னும் எவர்
- ḍalla
- ضَلَّ
- வழிகெட்டார்
- fa-innamā yaḍillu
- فَإِنَّمَا يَضِلُّ
- அவர் வழிகெடுவதெல்லாம்
- ʿalayhā
- عَلَيْهَاۖ
- தனக்குக்கேடாகத்தான்
- wamā anā
- وَمَآ أَنَا۠
- இல்லை/நான்
- ʿalaykum
- عَلَيْكُم
- உங்கள் மீது
- biwakīlin
- بِوَكِيلٍ
- பொறுப்பாளனாக
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே இந்தச் சத்திய வேதம் உங்களிடம் வந்திருக்கிறது. எவன் (இதனைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே அந்த நேரான வழியில் செல்கிறான். எவன் (இதனைப் பின்பற்றாது) வழிதப்பி விடுகிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடான வழியிலேயே செல்கிறான். அன்றி, நான் உங்களை (நிர்ப்பந்தித்து) நிர்வகிக்கத் தக்க அதிகாரம் பெற்றவனல்லன். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௮)Tafseer
وَاتَّبِعْ مَا يُوْحٰىٓ اِلَيْكَ وَاصْبِرْ حَتّٰى يَحْكُمَ اللّٰهُ ۚوَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ ࣖ ١٠٩
- wa-ittabiʿ
- وَٱتَّبِعْ
- பின்பற்றுவீராக
- mā
- مَا
- எது
- yūḥā
- يُوحَىٰٓ
- வஹீ அறிவிக்கப்படுகிறது
- ilayka
- إِلَيْكَ
- உமக்கு
- wa-iṣ'bir
- وَٱصْبِرْ
- இன்னும் பொறுப்பீராக
- ḥattā
- حَتَّىٰ
- வரை
- yaḥkuma
- يَحْكُمَ
- தீர்ப்பளிப்பான்
- l-lahu
- ٱللَّهُۚ
- அல்லாஹ்
- wahuwa
- وَهُوَ
- அவன்
- khayru
- خَيْرُ
- மிக மேலானவன்
- l-ḥākimīna
- ٱلْحَٰكِمِينَ
- தீர்ப்பளிப்பவர்களில்
(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப் பட்டவைகளையே நீங்கள் பின்பற்றி வாருங்கள். அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் (எதிரிகளால் ஏற்படும் கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருங்கள். தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அவன்தான் மிக்க மேலானவன். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௯)Tafseer